புத்தரின் வார்த்தைகள்
புனித பௌத்த இலக்கியத்திலிருந்து தினசரி படிக்க வேண்டியவை
ஆங்கிலத்தில் வணக்கத்துக்குரிய எஸ். தம்மிக்கா
தமிழில் திரு தி. சுகுணன், எம். ஏ.
THE WORDS OF THE BUDDHA
Daily Readings from the Buddhist Scriptures
By Bhante S. Dhammika
ஏப்ரல் 91-120 April
புனித பௌத்த இலக்கியத்திலிருந்து தினசரி படிக்க வேண்டியவை
ஆங்கிலத்தில் வணக்கத்துக்குரிய எஸ். தம்மிக்கா
தமிழில் திரு தி. சுகுணன், எம். ஏ.
THE WORDS OF THE BUDDHA
Daily Readings from the Buddhist Scriptures
By Bhante S. Dhammika
ஏப்ரல் 91-120 April
91. மனம் ஒளி தரக் கூடியது. ஆனால் அது புற மாசுகளால் கறை பட்டிருக்கிறது. சாதாரண மக்கள் இதை உணராததால் மனத்தைப் பண்படுத்தாமல் வைத்திருக்கின்றனர்.
மனம் ஒளிமயமானது. புற மாசுகளால் ஏற்பட்ட கறையைத் தூய்மைப் படுத்தலாம். இதனை மேன்மையான மாணவன் உணர்கிறான். உணர்ந்து மனத்தைப் பண்படுத்துகிறான்.
The mind is luminous but it is stained by defilements that come from without. Ordinary folk do not realize this, so they do not cultivate their minds. The mind is luminous but it can be cleansed of defilements that come from without. This the noble disciples understand, so they do cultivate their minds.
A.I,10
92. ஒருவனின் சிறந்த நண்பன் யார்? ஒருவனின் மோசமான எதிரி யார்?
யாருடைய எண்ணங்கள், சொற்கள், செயல்கள் தீமையானவையாக இருக்கின்றனவோ அவர்களே தங்களின் மோசமான எதிரியாம். 'நாங்கள் எங்களை மிகவும் கவனித்துக்கொள்கிறோம்' என்று கூறினால் கூட, அவர்களே அவர்களின் மோசமான எதிரிகளாம். ஏன்? ஏனென்றால் ஒருவன் தன் எதிரிக்குச் செய்யும் தீமைகளைத் தனக்கே செய்து கொள்கிறான்.
எவருடைய எண்ணங்கள், சொற்கள், செயல்கள் நன்மை நிறைந்தவைகளாகத் தூய்மையானவையாக இருக்கின்றனவோ அவர்களே தங்களின் சிறந்த நண்பர்களாம். 'நாங்கள் எங்களைப் பற்றி அக்கறை எடுத்துக்கொள்வதில்லை!' என்று கூறினால்கூட அவர்களே அவர்களுடைய உண்மையான நண்பர்கள். ஏன்? ஏனென்றால் ஒருவன் தனது நண்பன் தனக்குச் செய்வதைத் தனக்குத்தானே செய்து கொள்கிறான்.
Who is one’s own best friend, and who is one’s own worst enemy? Those whose thoughts, speech and actions are evil, they are their own worst enemy. Even if they were to say: ‘We care about ourselves,’ nevertheless they would still be their own worst enemy. And why? Because that which one would do to an enemy they do to themselves.
Those whose thoughts, speech and actions are good, they are their own best friends. Even if they were to say: ‘We don’t care about ourselves,’ nevertheless they would still be their own best friend. And why? Because that which one would do to a friend, they do to themselves. S.I,72
93. பேராசை, காழ்ப்புணர்ச்சி, மாயம் என்னும் ஏமாற்றம் ஆகியவை திறனற்றவை. பேராசை, காழ்ப்புணர்ச்சி, ஏமாற்ற உணர்வுடைய ஒருவன் உடலால், சொல்லால், செயலால் செய்வதெல்லாம் திறனற்றவையே. மனம் கட்டுப்படுத்தப்படாமல், பேராசை, காழ்ப்புணர்ச்சி, ஏமாற்றம் இவற்றால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் ஒருவன் மற்றவர்க்குச் செய்யும் செயல்கள் - நீதியற்ற முறையில் ஒருவருக்குத் தண்டனை கொடுப்பது, சிறையிலிடுவது, அபராதம் விதிப்பது, நாடுகடத்துவது, தன்னிடம் பலமிருப்பதால் 'வல்லான் வகுத்ததே சட்டம்' என்று மற்றவர்க்குத் தீங்கு விளைவிப்பது - அவை அனைத்தும் கூடத் திறனற்ற செயல்களே.
Greed, hatred and delusion are unskillful. Whatever the greedy, hating or deluded person does with body, speech or mind - that is unskillful too. Whatever one overwhelmed by greed, hatred or delusion and with mind uncontrolled, does to another, unjustly causing him suffering through punishment, imprisonment, fine, abuse, banishment, or on the excuse that ‘might is right’ - all that is unskillful, too.
A.I,201
94. உலகில் முன்னேறுவதற்கு நான்கு வழிகள் நம்மை அழைத்துச் செல்கின்றன. எந்த நான்கு? விழிப்பாக இருக்கும் போது செய்து முடித்தல் அல்லது சாதித்தல், எச்சரிக்கையாக இருக்கும் போது சாதித்தல், நல்ல நட்பிருக்கும் போது சாதித்தல், சமநிலையான வாழ்க்கை நடத்தும் போது சாதித்தல் ஆகியவையே அவை.
விழிப்பாக இருக்கும் போது சாதித்தல் என்றால் என்ன? இதன் தொடர்பாக, ஒருவன் வாழ்க்கை நடத்த எவ்வழியில் பொருளீட்டினாலும், விவசாயம் செய்தோ, வாணிகம் செய்தோ, ஆடுமாடு வளர்த்தோ, வில்வித்தையாலோ, அரசரிடம் பணி செய்தோ அல்லது ஏதாவது கைத்திறனாலோ இப்படிப்பட்ட ஏதாவதொன்றில் கைவந்தவராகிறார். களைப்பின்றி அதைப்பற்றி நன்கு விசாரித்துப் பல வழிகளிலும் முறையான முன்னேற்பாடுகள் செய்துகொண்டு அதைச் சிறப்பாகச் செய்து முடிக்கிறார்; சாதித்து முடிக்கிறார்.
எச்சரிக்கையாக இருக்கும் போது சாதித்தல் என்பது என்ன? ஒருவர் சுறுசுறுப்பாகப் பாடுபட்டு உழைத்தும் அல்லது கை வலிவாலும், நெற்றி வியர்வையைக் கொட்டி, நீதி நேர்மையுடன் சட்டத்திற்குட்பட்டு ஈட்டிய பொருளைச் சிக்கனமாகக் கவனமாகப் பாதுகாத்து வைத்தால், அப்பொருளை அரசர் அல்லது அரசாங்கம் பறிமுதல் செய்யவோ, திருடரால் களவாடவோ, நெருப்பாலோ, நீராலோ அழிக்கவோ, தேவையற்ற வாரிசுதாரர்களால் எடுத்துக் கொள்ளவோ முடியாது. இதுவே எச்சரிக்கையாக இருக்கும் போது சாதித்தலாகும்.
நல்ல நட்பென்றால் என்ன? ஒருவர் சிற்றூரில் வாழ்ந்தாலும், நகரத்தில் வாழ்ந்தாலும், இளைஞர்களிடமோ, முதியவர்களிடமோ யாரிடம் பழகினாலும், உரையாடினாலும், விவாதித்தாலும், அவர்கள் நாகரிகமுடையவர்களாக, முழு நம்பிக்கைக்குரியவர்களாக, முழுமையான நல்லொழுக்கமுடையவர்களாக, முழுமையான கொடைத்தன்மையுள்ளவர்களாக, முழுமையான அறிவுபடைத்தவர்களாக இருக்க வேண்டும். நம்பிக்கையானவர்களின் நம்பிக்கையுடன், ஒழுக்கமானவர்களின் ஒழுக்கத்துடன், கொடைத்தன்மையுடையவர்களின் கொடையுடன் அறிஞர்களின் அறிவுடன் இயங்க வேண்டும். அதுவே நல்ல தூய நட்பாம்.
சமநிலையான வாழ்கை முறை யென்றால் என்ன? ஒருவனுக்குத் தனது வருமானம் எவ்வளவு, செலவு எவ்வளவு என்பது தெரியும். செலவு வருமானத்தை மீறக் கூடாதென்பதும் தெரியும். ஆகையால் அவன் வரம்பு மீறிச் செலவு செய்யவும் கூடாது. கஞ்சத்தனமாகவும் இருக்கக் கூடாது. ஒரு பொற்கொல்லனுக்கோ அல்லது அவனிடம் வேலைகற்றுக்கொள்பவனுக்கோ தராசைப் பிடிக்கும் போதே அது எவ்வளவு சரிந்திருக்கின்றது அல்லது எவ்வளவு சாய்ந்திருக்கிறது என்பது தெரியும். அதைப்போலவே ஒருவனுக்குத் தனது வருமானமும் செலவும் எவ்வளவு என்று தெரியவேண்டும். குறைந்த வருமானமுடைய ஒருவன் வரம்பு மீறிச் செலவு செய்து ஆடம்பரமாக வாழ்ந்தால், அவனைப் பார்த்து 'இவன் தன் செல்வத்தை விளாம்பழத்தை சாப்பிடுபவனைப் (அதாவது, சுரண்டிச் சுரண்டிச் சாப்பிடுபவனைப்) போல அநுபவிக்கிறான்' என்று கூறுவர். அதைப்போலவே நல்ல வருமானமுடையவன் கஞ்சத்தனமாக வாழ்ந்தால், அவனைப் பார்த்து 'இவன் ஒரு பிச்சைக்காரனைப்போல இறப்பான்' என்பர்.
ஒருவன் சேமித்த செல்வம் நான்கு வழிகளில் இழக்கப்படுகிறது. காமாந்தகாரத்தால், குடிப்பழக்கத்தால், சூதாட்டத்தால், தீமை செய்யும் நண்பர்களால் செல்வம் இழக்கப்படுகிறது. சான்றாக ஒரு பெரிய குளத்திற்குத் தண்ணீர் வருவதற்கு நான்கு வழிகளும், வெளியேறுவதற்கு நான்கு வழிகளும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். நீர் வரும் நான்கு வழிகளையும் மூடிவிட்டு வெளியேறும் நான்கு வழிகளையும் திறந்து வைத்திருந்து, மழையும் பெய்யாவிட்டால், தண்ணீர் குறைந்துவிடுமென்பதை நாம் எதிர்பார்க்கலாம். அதைப்போலவே செல்வமும் இந்நான்கு வழிகளில் அழிந்துவிடும்.
சேமித்த செல்வத்தைக் காப்பாற்றுவதற்கும் நான்கு வழிகளிருக்கின்றன. அவையாவன காமவெறியைத் தவிர்த்தல், குடியைத் தவிர்த்தல், சூதாட்டத்தைத் தவிர்த்தல், தீயவர்களின் நட்பைத் தவிர்த்தல். ஒரு பெரிய குளத்திற்குத் நீர் வருவதற்கு நான்கு வழிகளும், நீர் வெளியேறுவதற்கு நான்கு வழிகளும் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒருவன் குளத்திற்கு நீர் வரும் வழிகளைத் திறந்து வைத்துவிட்டுக் குளத்திலிருந்து நீர் வெளியேறும் வழிகளை மூடிவிட்டால், நல்ல மழையும் பெய்தால், அக்குளத்தில் நீர்மட்டம் உயருமென்று நாம் எதிர்பார்க்கலாம்.அதைப்போலவே, இந்த நான்கு வழிகளிலும் செல்வம் பாதுகாக்கப்படுகிறது.
Four things lead to worldly progress. What four? Achievement in alertness, in caution, in good friendship and achievement in balanced livelihood. And what is achievement in alertness? Concerning this, in whatever way one earns a living, whether by farming, trading, cattle rearing, archery, service to the king or by some craft, in that one becomes deft and tireless, gifted with an inquiring turn of mind into ways and means, and able to arrange and carry out the job properly.
And what is achievement in caution? Concerning this, whatever wealth one acquired by energetic striving, won by strength of arm and sweat of brow, justly and lawfully, one husbands, watches and guards so that kings do not confiscate it, thieves do not steal it, fire or water do not destroy it, and unwanted heirs do not remove it.
And what is good friendship? Concerning this, in whatever village or town one lives, one associates with, converses with, discusses things with people either young or old, who are cultured, full of faith, full of virtue, full of charity and full of wisdom. One acts in accordance with the faith of the faithful, the virtue of the virtuous, the charity of the charitable and the wisdom of the wise.
And what is balanced livelihood? Concerning this, one knows both his income and expenditure and lives neither extravagantly nor miserly, knowing that income after expenditure will stand at so much and that expenses will not exceed income. Just as a goldsmith or his apprentice holding up the scales, knows that it has dipped down by so much or that it has tilted up by so much, one knows one’s income and one’s expenditure. If one with small income were to lead an extravagant life people would say: ‘He enjoys his wealth like a wood-apple eater.’ Likewise, if one with a good income were to be miserly, people would say: ‘He will die like a beggar.’
There are four channels through which the wealth one has collected is lost: debauchery, drunkenness, gambling and friendship with evildoers. Imagine there were a great tank of water with four inlets and four outlets, and a man was to close the inlets but keep the outlets open. If there were no rain we could expect the water to decrease. In the same way, there are the four channels through which wealth is lost. There are these four channels through which the wealth one has collected is preserved. What four? Avoidance of debauchery, drunkenness, gambling and friendship with evildoers. Imagine there were a great tank of water with four inlets and outlets, and a man was to keep the inlets open and close the outlets. If he did this and there were good rainfall, we could expect the water to increase. In the same way, there are these four channels through which wealth is preserved.
A.IV,281 "Dighajanu (Vyagghapajja) Sutta"
95. மற்றவரை விசாரணை செய்யும் நீதிபதி ஆகாதீர்கள். மற்றவரைக் கண்டிக்காதீர்கள். மற்றவர் குறைகளைக் கண்டிப்பவன் தனக்குத் தானே குழி பறித்துக் கொள்கிறான்.
Do not be a judge of others, do not judge others. Whoever judges others digs a pit for themselves.
A.III,351
96. இந்த ஐந்து வாணிகத்தையும் இல்வாழ்க்கை நடத்தும் சாதாரண மக்கள் செய்யக் கூடாது. அவை எவை? ஆயுதங்களை விற்பனை செய்தல், மனிதர்களை விற்பனை செய்தல், இறைச்சி வாணிகம், போதை தரும் பொருள்களை விற்பனை செய்தல், நஞ்சு விற்கும் வாணிகம் ஆகியவையே அவை.
These five trades ought not to be practiced by a layperson. What five? Trade in weapons, trade in human beings, trade in flesh, trade in alcohol and trade in poisons.
A.III,208
97. நான்கு நற்குணங்களிருந்தால் ஒருவனை நல்லவன் என அறிந்து கொள்ளலாம். அவை எவை?
நல்லவன் மற்றவர்களின் கெட்ட குணங்களைப் பற்றிக் கேட்டால்கூடக் கூறமாட்டான். அப்படி இருக்கக் கேட்காதபோது சொல்ல வேண்டிய தேவையே இல்லை. ஆனால் கேள்விகள் கேட்கப்பட்டு அவன் பதில் கூற வேண்டிய நிலை ஏற்படும்போது (உதாரணத்திற்கு ஒரு நீதிமன்றத்தில்), மற்றவனின் கெட்ட குணங்களைப் பற்றி அடக்கத்தோடும், தயக்கத்துடனும், சுருக்கமாகவும் கூறுவான். 'இவன் நல்ல மனிதன்' என்று கூறும் சொற்களின் பொருளே இதுதான்.
மறுபடியும் நல்ல மனிதன் கேட்காத போதும் ஒருவனின் நற்குணங்களைப் பற்றிப் பேசுவான். அப்படி இருக்கக் கேட்கும் போது சொல்ல வேண்டியதே இல்லை. ஆனால் கேள்விகள் கேட்கப்பட்டு அவன் பேச வேண்டிய நிலை ஏற்படும்போது, எதையும் மறைக்காது மற்றவனைத் தயக்கமின்றி ஆர்வத்துடன் முழுமையாகப் புகழுவான். 'இவன் நல்ல மனிதன்' என்று கூறும் சொற்களின் பொருளே இதுதான்.
மறுபடியும் அந்த நல்ல மனிதன் அவனைப்பற்றிக் கேட்காத போதும் கூட, அவனைப் பற்றிய சொந்த அவமானத்திற்குரிய செய்திகளைக் கூடக் கூறுவான். அப்படி இருக்கக் கேட்கும் போது சொல்ல வேண்டியதே இல்லை. மேலும், கேள்விகள் கேட்கப்பட்டு அவன் பேச வேண்டிய நிலை ஏற்படும்போது, எதையும் மறைக்காமல் அவனுக்கு அவமானம் ஏற்படக் கூடியவற்றைப் பற்றிக் கூடத் தயக்கமின்றி முழுமையாகக் கூறிவிடுவான். 'இவன் நல்ல மனிதன்' என்று கூறும் சொற்களின் பொருளே இதுதான்.
இறுதியாக அந்த நல்ல மனிதன் தனக்குப் பெருமை தரக்கூடிய செயல்களை மற்றவர் கேட்டாலுங்கூடக் கூற மாட்டான். அப்படி இருக்கக் கேட்காதபோது சொல்ல வேண்டியதே இல்லை. மேலும், கேள்விகள் கேட்கப்பட்டு அவன் பேச வேண்டிய நிலை ஏற்படும்போது, தனக்குப் பெருமை தரும் செயல்களைப் பற்றி அடக்கத்துடன் தயக்கத்துடனும் சுருக்கமாகவும் கூறுவான். 'இவன் நல்ல மனிதன்' என்று கூறும் சொற்களின் பொருளே இதுதான்.
Possessed of four qualities, one can be considered a good person. What four? Concerning this, the good person does not speak of what is to the discredit of another, even when asked. What then when unasked? If, however, on being questioned, he is required to speak, then with reserve, hesitation and in brief he dispraises the other person. This is the meaning of the saying: ‘This person is good.’
Again, the good person, even when unasked, speaks of what is to the credit of another. What then when asked? If, however, on being questioned, he is required to speak, then without reserve, willingly and in full, he praises the other person. This is the meaning of the saying: ‘This person is good.’
Once again, the good person, even when unasked, speaks of what is to his own discredit. What then when asked? If, however, on being questioned, he is required to speak, then without reserve or hesitation and in full he speaks of what is to his own discredit. This is the meaning of the saying: ‘This person is good.’
Finally, the good person does not speak of what is to his own credit, even when asked. What then when unasked? If, however, on being questioned, he is required to speak, then with reserve, unwillingly and in brief he speaks of what is to his own credit. This is the meaning of the saying: ‘This person is good.’
A.II,77 "Sappurisa Sutta: A Person of Integrity "
98. என் துவராடையின் விளிம்பைப் பிடித்துக் கொண்டு என் பின்னால் அடிமேல் அடி வைத்து என்னைப் பின் தொடர்ந்தாலும், அவன் ஆசைகளில் தகாத விருப்பங் கொண்டு, கொடூரமாக ஏங்கிக் கேடு நினைக்கிற உள்ளத்தோடு, இலஞ்ச லாவண்ய எண்ணத்தோடு, கவனக் குறைவோடு, அடக்கமின்றி, கூச்சல்குழப்பத்துடன், அடக்க முடியாப் புலனுணர்வுகளோடு என்னைத் தொடர்ந்தால், அவன் என்னிடமிருந்து வெகு தொலைவில் இருக்கிறான். ஏன்? அவன் அறத்தைப் பார்ப்பதில்லை; அறத்தைப் பார்க்காததால் அவன் என்னைப் பார்ப்பதில்லை.
ஒருவன் நூறு கல் தொலைவிற்கு அப்பாலிருந்தாலும், அவன் ஆசைகளில் தகாத விருப்பமின்றி, ஏக்கத்தில் கொடூரமின்றி, இரக்க குணத்துடன், தூய்மையான உள்ளத்துடன், கவனத்துடன், அமைதியுடன், ஒரே குறிக்கோளுடன் புலன்களைக் கட்டுப்படுத்தி வாழ்ந்தானேயானால் உண்மையிலேயே அவன் எனக்கு மிக அருகில் இருக்கிறான். நானும் அவன் அருகில் இருக்கிறேன். ஏன்? அவன் அறத்தைக் காண்கிறான்; அறத்தைக் காண்பதால் அவன் என்னைக் காண்கிறான்.
Even if one should seize the hem of my robe and walk step by step behind me, if he is covetous in his desires, fierce in his longings, malevolent of heart, with corrupt mind, careless and unrestrained, noisy and distracted and with uncontrolled senses, he is far from me. And why? He does not see the Dhamma, and not seeing the Dhamma, he does not see me.
Even if one lives a hundred miles away, if he is not covetous in his desires, not fierce in his longings, with a kind heart and pure mind, mindful, composed, calmed, one-pointed and with restrained senses, then indeed, he is near to me and I am near to him. And why? He sees the Dhamma, and seeing the Dhamma, he sees me.
It.91
99. ததாகதர் பேரறிவு பெற்றதிலிருந்து அவர் இறக்கும் வரை என்னென்ன மொழிந்தாரோ, பேசினாரோ, பிரகடனப்படுத்தினாரோ அவை அனைத்தும் உண்மையானவை. வாய்மையானவை. வாய்மையற்றதன்று. அதனால் தான் அவர் ததாகதரென்று அழைக்கப்படுகிறார்.
Whatever the Tathagata utters, speaks and proclaims between the day of his enlightenment and the day he dies, all that is factual, not otherwise. That is why he is called the Tathagāta.
A.II,24
100. ஒரு பகைவன் மற்றொரு பகைவனுக்கு அல்லது
வெறுப்பவன் வேறொரு வெறுப்பவனுக்குச்
செய்யக் கூடிய தீமையைவிடத்
தீய திசைகளில் செலுத்தப்பட்ட மனம்
ஒருவனுக்கு மிகப் பெரிய தீமை விளைவிக்கிறது.
தாயோ தந்தையோ
வேறு உறவினரோ
செய்ய முடியாத நன்மையைச்
சரியான முறையில் நடத்தப்பட்ட மனம் செய்யும்.
Whatever harm an enemy can do to an enemy,
Or a hater to a hater,
An ill-directed mind
Causes oneself even greater harm.
No mother or father
Or any other kin
Can do greater good for oneself
Than a well-directed mind.
Dhp.42-43
101. 'எவருக்குப் பொறுமையில்லையோ அவர்கள் இந்த உலகிலும் வருந்துவார்கள். அவர்கள் செய்யும் செயல்களால் அவர்கள் அடுத்த பிறப்பிலும் வருந்தவே செய்வார்கள்!' என்பதை நினைத்து ஒருவரின் பொறுமையைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மற்றவர் செய்த தீய செயல்களால் இத்துன்பம் ஏற்பட்டாலும் என் உடலே அத்துன்பத்திற்குத் திடலாகும்; நிலமாகும். இத்துன்பத்திற்குக் காரணமான வினைகள் (செயல்கள்) என்னுடையவையே!' என்று ஒருவர் எண்ணவேண்டும்.
'தவறு செய்யாதவர்கள் இல்லையென்றால் நான் பொறுமையை எப்படி முழுமைக்குக் கொண்டுவரமுடியும்?' என்று ஒருவர் நினைக்க வேண்டும்.
'இன்று அவர் தவறு செய்பவராக இருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் அவர் என்னை ஆதரித்தவராகக்கூட இருந்திருக்கலாம்!' என்று ஒருவர் நினைக்கவேண்டும்.
'ஒரு தவறு செய்பவர் அதே நேரத்தில் மற்றவரை ஆதரிப்பவராகக்கூட இருக்கலாம். ஏனென்றால் அவர் மூலமாகவே பொறுமையைப் பயிற்சி செய்து கொள்ளலாம்!' என்றொருவர் நினைக்க வேண்டும்.
'எல்லா உயிர் வாழ்வனவும் என் குழந்தைகளைப் போன்றவர்களே. குழந்தைகள் செய்த தவற்றுக்கு எந்தப் பெற்றோர் கோபப்படுவர்?' என்றொருவர் நினைக்க வேண்டும்.
'அவன் எனக்குக் கெடுதல் செய்கின்றான் என்றால் ஏதோ என்னுள் தவறிருக்கிறது, நான் முயற்சி செய்து என் தவற்றை நீக்கவேண்டும்.' என்றொருவர் நினைக்க வேண்டும்.
One’s patience should be strengthened by thinking: ‘Those who have no patience are afflicted in this world and do actions that lead to affliction in the next life.’ One should think: ‘Although this suffering arises because of the wrong deeds of others, my body is the field for that suffering, and the actions which brought it into being are mine.’ One should think: ‘If there were no wrongdoers, how could I bring patience to perfection?’ One should think: ‘Although he is a wrongdoer now, in the past he may have been my benefactor.’ One should think: ‘A wrongdoer is at the same time a benefactor because through him patience can be practiced.’ One should think: ‘All beings are like my own children and who would get angry over the misdeeds of one's own children?’ One should think: ‘He does me wrong because of some fault in myself; I should strive to remove this.’
Cp-a.290*
102. கோபமடைந்த ஓர் ஆணையோ அல்லது ஒரு பெண்ணையோ அந்நிலையிலேயே வைத்திருக்க ஏழு நிபந்தனைகளுள. அவை எதிரிகளுக்குக் கைம்மாறாகவும் உதவியாகவும் இருக்கின்றன. அவை எவை?
எதிரியைப் பற்றிய ஒருவனின் கருத்தைப் பாருங்கள். 'அவன் அழகற்றவனாக இருக்க வேண்டும்!' ஏன்? ஒருவன் அழகான எதிரியைவிரும்ப மாட்டான். இவன் குளித்து எண்ணெய் தேய்த்து ஒழுங்காகத் தாடியையும் முடியையும் கத்தரித்து இருந்தாலும் அவன் நம்பிக்கையிழந்து கோபத்தில் மூழ்கியிருப்பதால், அவன் அழகற்றவனாகிறான்.
எதிரியைப் பற்றிய மற்றொருவனின் கருத்தைப் பாருங்கள். 'அவன் நன்றாகத் தூங்கக் கூடாது!' ஏன்? ஒருவன் தன் எதிரி நன்றாகத் தூங்குவதை விரும்ப மாட்டான். இவன் நம்பிக்கையிழந்து கோபத்தில் மூழ்கியிருப்பதால் வெள்ளைக் கம்பளம் விரித்து, அதன் மேல் கம்பளித் துணியால் போர்த்தி, அதன் உறைகளெல்லாம் பூ வேலைப்பாடு செய்யப்பட்டு, அதன் மேல் கறுப்புமான் தோலால் போர்த்தி, படுக்கைக்கு மேற்புறமும் மேற்கட்டி கட்டி, சிவப்பு மெத்தைத் திண்டுகளைப் படுக்கையின் ஒவ்வொரு விளிம்பிலும் போட்டிருந்தாலும் அவனுடைய கோபத்தால் அவன் நன்றாகத் தூங்க முடியாது.
மறுபடியும் எதிரியைப் பற்றிய ஒருவனின் கருத்தைக் காணுங்கள்! 'என் எதிரி ஏழையாக மாற வேண்டும்!' ஏன்? ஒருவன் செல்வந்தனான எதிரியை விரும்ப மாட்டான். இவன் நம்பிக்கையிழந்து கோபத்தில் மூழ்கியிருப்பதால், இவன் உறுதியுடன், கைபலத்தாலும், நெற்றி வியர்வையாலும நேர்மை யாகவும் சட்டபூர்வமாகவும் சம்பாதித்த அச்செல்வங்களனைத்தையும் அரசன், அவன் நம்பிக்கையிழந்து கோபத்தில் மூழ்கியிருப்பதால், அரசாங்கக் கருவூலத்திற்கு எடுத்துச் செல்லக் கட்டளையிடுவான்.
மற்றொருவன் தன் எதிரியைப் பற்றி நினைப்பதைப் பாருங்கள்! 'என் எதிரி புகழுடன் வாழக்கூடாது!' ஏன்? புகழுடன் வாழும் எதிரியை ஒருவன் விரும்ப மாட்டான். இப்படிப்பட்டவன் நம்பிக்கையிழந்து கோபத்தில் மூழ்கியிருப்பதால், அவன் எவ்வளவு புகழை ஈட்டியிருந்தாலும், அவன் கோபத்தில் மூழ்கியிருப்பதால் அப்புகழனைத்தும் அவனை விட்டு நீங்கிவிடும்.
இன்னொருவன் தன் எதிரியைப் பற்றி நினைப்பதைப் பாருங்கள்! 'என் எதிரிக்கு நண்பர்களே இருக்கக்கூடாது!' ஏன்? ஒருவன் தன் எதிரி நண்பர்களுடன் இருப்பதை விரும்ப மாட்டான். இவனைப் பொருத்தவரை இவன் நம்பிக்கையிழந்து கோபத்தில் மூழ்கியிருப்பதால், நண்பர்களும் மிக நெருங்கியவர்களும், உறவினரும், கிளைஞரும் இவனைத் தவிர்த்து வெகு தொலைவிலேயே வாழ்வர். ஏனென்றால் இவன் கோபத்திலேயே மூழ்கியிருக்கிறானே.
இறுதியாக ஒருவன் தன் எதிரியைப் பற்றி நினைப்பதைப் பாருங்கள். 'அவன் நரகத்திற்குப் போவதை நான் விரும்புகிறேன்!' ஏன்? ஒருவன் தன் எதிரி சொர்க்கத்திற்குப் போவதை விரும்ப மாட்டான். இவன் நம்பிக்கையிழந்து கோபத்தில் மூழ்கியிருப்பதால், உடலால், சொல்லால், உள்ளத்தால் அவனே தீய நடத்தைகளில் ஈடுபடுவதால் அவனே நரகத்திற்குச் செல்வான்.
இவையே அந்த ஏழு நிபந்தனைகள்! இந்நிபந்தனைகளே கோபமடைந்த ஆணையோ அல்லது பெண்ணையோ தொடர்ந்து சென்று பிடித்து எதிரிகளுக்குக் கைமாறாகவும் உதவியாகவுமிருக்கின்றன.
These seven conditions overwhelm an angry man or woman and are gratifying and helpful to their rival. What seven? One may wish this of a rival: ‘I wish he was ugly.’ And why? One does not like an attractive rival. Overwhelmed and undermined by anger that person becomes ugly even though he is bathed, anointed, with trimmed hair and beard and clad in clean clothes.
Then one may wish this of a rival: ‘I hope he sleeps badly.’ And why? One does not like a rival to sleep well. Overwhelmed and undermined by anger that person sleeps badly even though he is lying on a bed spread with fleecy cover, spread with white blankets and woolen cover embroidered with flowers, covered by an antelope skin, with awning above and red cushions at each end.
Again, one may wish this of a rival: ‘I hope he becomes poor.’ And why? One does not like a rich rival. Overwhelmed and undermined by anger that person becomes poor because, owning whatever wealth he has acquired by energetic striving, won by strength of arm and sweat of brow, justly and lawfully, the king will order them all sent to the royal treasury because he is overwhelmed by anger.
Once again, one may wish this of a rival: ‘I hope he was without fame.’ And why? One does not like a famous rival. Overwhelmed and undermined by anger, whatever reputation that person has earned falls away because he is overwhelmed by anger.
Again, one may wish this of a rival: ‘I hope he has no friends.’ And why? One does not like a rival with friends. Overwhelmed and undermined by anger, whatever friends, intimates, relatives and kin that person has will all avoid him and keep away from him because he is overwhelmed by anger.
And finally, one may wish this of a rival: ‘I hope he goes to hell.’ And why? One does not like a rival to go to heaven. Overwhelmed and undermined by anger, that person misconducts himself in body, speech, and mind and thus goes to hell himself. These are the seven conditions that overwhelm an angry man or woman and are gratifying and helpful to their rival.
A.IV,94
103. ஒரு தொழு நோயாளி, அவன் கைகால்கள் அழுகிச் சீழ்பிடித்துத் தொல்லைதரும் வேதனையோடு துன்புறும்போது அவனுடைய திறந்த புண்களை நகத்தாலும், உடலை ஒரு சிறு கரித்துண்டாலும் சொறிந்து கொள்வான். பிறாண்டிக் கொள்வான். அதிகமாக அவன் அப்படிச் செய்யச் செய்ய அவனுடைய திறந்த நிலையிலிருக்கும் புண்கள் சீழ்பிடித்து, கெட்ட நாற்றத்துடன் அழுகிப் போகும். சொறிந்து கொள்வதால் சிறிதே நிவாரணம் கிடைத்தாலும் உண்மையில் அவன் துன்பத்தை அதிகரித்துக் கொள்கிறான்.
அதைப்போலவே இதுவரை பற்றிலிருந்தும் புலன் உணர்வு ஆசைகளிலிருந்தும் விடுதலை பெறாதவர்கள் ஆசையால் உந்தப்பட்டு அலைந்து புலனுணர்வு மகிழ்ச்சிக்கு ஏங்கி அதனைத் துரத்திக் கொண்டிருப்பர். அவர்கள் புலனுணர்வுக்காக ஓட ஓட அவர்கள் அதற்காக யாசிப்பர், அலைவர். இது அவர்களுக்குச் சிறிதே நிவாரணமளிக்கும். ஆனால் உண்மையில் அவர்களின் தனிக்கமுடியா ஏக்கத்தின், அலைச்சலின் காரணமாக அவர்கள் துக்கம் அதிகரிக்கின்றது.
It is like a leper with his limbs all ravaged and festering, being eaten by vermin, who tears his open sores with his nails and scorches his body over a charcoal pit. The more he does it the more those open sores become septic, evil-smelling and putrefying. And the scratching brings but little relief. In a similar way do beings who are not yet freed from attachment to sense pleasures, while being consumed by the craving for and burning with the fever of sense pleasures, continue to chase after them. And the more they chase after them, the more they crave and burn for them. And this brings but little relief.
M.I,508
104. சோம்பேறித் தனத்துடன் இந்த ஆறு ஆபத்துகளும் சேர்ந்தேயிருக்கின்றன. 'இப்பொழுது கடுங்குளிர்’ என்று நினைத்து வேலை செய்யாமலிருப்பது, 'இப்பொழுது கடும் வெய்யில்’ என்று நினைத்து வேலை செய்யாமலிருப்பது, 'இது அதிகாலை’ என்று நினைத்து வேலை செய்யாமலிருப்பது, 'இப்பொழுது காலங்கடந்து விட்டது’ என்று நினைத்து வேலை செய்யாமலிருப்பது, 'எனக்கு நிரம்பப் பசிக்கிறது’ என்று நினைத்து வேலை செய்யாமலிருப்பது, 'நான் அதிகமாகச் சாப்பிட்டு விட்டேன்’ என்று நினைத்து வேலை செய்யாமலிருப்பது போன்றவையே இந்த ஆறு ஆபத்துகளாம்.
There are these six dangers associated with idleness. Thinking: ‘It’s too cold,’ one does not work. Thinking: ‘It’s too hot,’ one does not work. Thinking: ‘It’s too early,’ one does not work. Thinking: ‘It’s too late,’ one does not work. Thinking: ‘I am too hungry,’ one does not work. Thinking: ‘I am too full,’ one does not work.
D.III,184
105. பூங்காவில் கூடியிருப்பவர்களுக்கு அண்ணல் கௌதமர் அறத்தைப் போதிக்கும் பொழுது அவர்களைப் பெருமைப் படுத்துவதுமில்லை. இழிவு படுத்துவதுமில்லை. அதற்கு மாறாக அங்கு கூடியிருந்த மக்களுக்கு அறத்தைப் போதிக்கும்போதே அவர்களை மகிழ்விக்கிறார், உயர்த்திப் பேசுகிறார், ஊக்கமளிக்கிறார், மகிழ்ச்சியிலாழ்த்துகிறார். அண்ணல் கௌதமரின் வாயிலிருந்து வரும் ஒலிக்கு எட்டு குணங்களுள. அது தனித்தன்மை கொண்டது, புரிந்து கொள்ளக் கூடியது, இனிமையானது, கேட்கமுடிவது, சரளமானது, தெளிவானது, ஆழமானது மற்றும் ஒத்த அதிர்வுடையது. ஆகையால் அவர் போதிக்கும்போது அவர் போதனை அம்மண்டபத்தைவிட்டு வெளியே போவதில்லை. மக்களும் மகிழ்ச்சியடைந்தபிறகு, உயர்வுபடுத்திய பிறகு, ஊக்கமும் மகிழ்வுமடைந்தபிறகு, அறத்தை அவ்வளவு ஆழ்ந்து அனுபவித்தபிறகு, விருப்பமின்றியே தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து அவர் மீது தங்கள் விழிகளைப் பதித்தவாறே பிரிவர்.
When the good Gotama teaches Dhamma to an assembly in a park he does not exalt them or disparage them. On the contrary, he delights, uplifts, inspires, and gladdens that assembly with talk on Dhamma. The sound of the good Gotama’s voice has eight qualities. It is distinct and intelligible, sweet and audible, fluent and clear, deep and resonant. Therefore, when he instructs the assembly, his voice does not go beyond that assembly. After being delighted, uplifted, inspired and gladdened with talk on Dhamma, the audience rise from their seats and depart reluctantly, keeping their eyes upon him.
M.II,140*
106. முட்டாளை அவன் செயல்களால் அறிந்து கொள்ளலாம், அதேபோல் அறிஞனையும் அவன் செயல்களால் அறிந்து கொள்ளலாம். ஒருவனின் செயலால் அவனது அறிவு தெளிவாக்கப்படுகிறது.
The fool may be known by his deeds. Likewise, the wise one may be known by his deeds. Wisdom is manifested by one’s deeds.
A.I,102
107. பண்பு நிறைந்த மாணவனிடம், முழுமையாகத் ததாகதருக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு அசைக்கமுடியாத நம்பிக்கையுடையவனிடம், ததாகதரைப் பற்றியோ அல்லது அவருடைய போதனைகளைப் பற்றியோ எவ்வித சந்தேகமோ அல்லது தடுமாற்றமோ இருக்காது. அப்படிப்பட்ட மாணவர்கள் மனத்துணிவுடனும், வலிமையுடனும் வாழ்வர். எப்போதும் தீய குணங்களைக் களைந்து நற்குணங்களை வளர்த்துக் கொள்ள முயல்வர். அவர்கள் சுறுசுறுப்புடன் முனைந்து செயல்பட நினைப்பர். நன்மையை இழந்துவிட மாட்டார்கள்.
The noble disciple who is utterly devoted to and has unshakable faith in the Tathagata can have no doubt or wavering concerning the Tathagata or his teachings. And it may be expected that such a disciple will live resolute in energy, always striving to abandon bad qualities and develop good ones, and that he will be energetic in exerting himself and will not drop the good.
S.V,225
108. ஒழிக்கப்பட வேண்டிய தீய எண்ணங்கள் அல்லது வன்மம் எழும்பொழுது அதனை அடக்கி வெற்றி கொள்ள ஐந்து வழிகளுள. எவை அந்த ஐந்து வழிகள்?
எவரிடத்தில் இந்த வன்மம் அல்லது தீய எண்ணம் எழுகிறதோ அவர்கள் தங்களுக்குள் அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எவரிடத்தில் இந்த வன்மம் எழுகிறதோ அவர்கள் தங்களுக்குள் கருணையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
எவருள் தீய எண்ணம் எழுகிறதோ அவர் சாந்தத்தையும், நிதானத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
எவருள் தீய எண்ணம் எழுகிறதோ அவர் அதை மறந்துவிட வேண்டும். அதன்மீது கவனம் செலுத்தவே கூடாது.
எவருள் தீய எண்ணம் வளர்கிறதோ, அது அவருடைய சொந்த உற்பத்தியே. ஆதலால் அதை அவர் மனத்தில் நிலை நிறுத்தி, 'இது நானே உருவாக்கிக் கொண்டது, என் செயல்களின் வாரிசு, என் செயல்கள் இதன் உற்பத்திக்கான சூழலை உருவாக்கியது, என் செயல்களே அதன் உறவும் அடிப்படையுமாகும். ஒருவர் நன்மை செய்தாலும் தீமை செய்தாலும் அதன் வாரிசாகவே மாறுவர்.' என்று எண்ண வேண்டும்.
இவ்வைந்து வழிகளால் தீய எண்ணத்தைத் தவிர்த்து விட வேண்டும்.
There are these five ways of overcoming malice which ought to be overcome when it arises. What five? In whoever malice arises, that one should develop love. In whoever malice arises, that one should develop compassion. In whoever malice arises, that one should develop equanimity. In whoever malice arises, that one should forget about it, pay no attention to it. In whoever malice arises, that one should consider the fact that it is of his own making and he should think: ‘This is of my own making, the outcome of actions; actions are its matrix, actions are its kin and foundation. And whatever one does, good or bad, one will become an heir to that.’ In these five ways malice should be put away.
A.II,185
109. நல்லவர்கள் சண்டையிட்டுக் கொண்டால் அவர்கள் விரைவில் சமாதானமடைந்து நீண்ட நாள் நிலைக்கக் கூடிய ஒரு பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எதற்கும் உதவாத விரிசலுடைய உடைந்த பானைகளைப் போல முட்டாள்களே சமாதானத்தை நாடுவதில்லை. இதைப் புரிந்த கொண்ட ஒருவன், இந்தப் போதனையைச் சிந்தித்துப் பார்ப்பவன் எது கடினமானதோ அதைச் செய்ய முற்படுகிறான். அவன் போற்றத்தக்கவன். யார் ஒருவன் மற்றவரின் தூற்றுதல்களைப் பொறுத்துக் கொள்கிறானோ அவனே சமரசம் செய்வதற்குத் தகுதியானவன்.
If good people quarrel they should quickly be reconciled and form a bond that long endures. Like useless cracked or broken pots, only fools do not seek reconciliation. One who understands this, who considers this teaching, does what’s hard to do and is a worthy brother. He who bears the abuse of others is fit to be a conciliator.
Ja.III,38
110. மற்றவர் எண்ணும் வகையில் ஒருவர் திறமையுள்ளவராக இருக்க முடியாது. ஆனால் இப்படி ஒரு முடிவாவது எடுக்கலாம்: 'என் எண்ணத்தின் படி நான் திறமையுள்ளவனாக மாறுவேன்!' இப்படித்தான் நீங்கள் உங்களுக்கே பயிற்சியளித்துக் கொள்ள வேண்டும். மேலும் இப்படித்தான் அதைச் செய்ய வேண்டும். தங்களை அலங்கரித்துக் கொள்வதில் நாட்டமுடைய ஒரு பெண், ஓர் ஆண் அல்லது ஒரு இளைஞன் தங்கள் உருவத்தை ஓர் ஒளி மிக்கத் தெளிவான கண்ணாடியிலோ அல்லது ஒரு பாத்திரத்திலிருக்கும் தெளிந்த நீரிலோ பார்த்து, கறையோ அல்லது பருவோ இருந்தால் அதை நீக்க முயற்சிப்பர். அந்தக் கறையோ, பருவோ மறைந்த பிறகு மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும் 'சுத்தமாக இருப்பது அனுகூலமே.' என்று நினைப்பர்.
இதே வழியில், நல்ல நிலையில் இருக்கும் போது ஒருவன் தன்னையே சோதித்துக் கொள்ளல் மிகவும் பயன் தரும். 'நான் வழக்கமாகவே பேராசைக்காரனா அல்லது வெறுக்கத்தக்கவனா, சோம்பேறித்தனத்துடன் உணர்ச்சியற்று இருக்கிறேனா, கிளர்ச்சி கொண்ட மனத்துடன் இருக்கிறேனா அல்லது சந்தேகத்துடனும் கோபத்துடனும் இருக்கிறேனா அல்லது நான் அப்படி இல்லையா?'
'கறைபட்ட எண்ணங்களுடன் நான் வாழ்கிறேனா அல்லது தூய்மையான எண்ணங்களுடனா, உடல் அன்புணர்ச்சியுடனிருக்கிறதா இல்லையா?, மந்தமாக இருக்கிறதா, சுறுசுறுப்பாக இருக்கிறதா? கட்டுப்படுத்தப்படவில்லையா அல்லது சரியாகக் கட்டுப்படுத்தப் படுகிறதா?'
தற் சோதனையில் ஒருவன், தான் இப்படிபட்ட தீய பயனற்ற நிலையில் வாழ்வதையுணர்ந்தால், அவன் மேலும் விருப்பப்பட்டு, முயற்சி எடுத்து, பிரயத்தனம் செய்து, சக்தியுடனும் , கவனத்துடனும் அக்கறையுடனும் இவற்றைக் கைவிட வேண்டும்.
மேலும் மேலும் தற்சோதனையில் அவன் இப்படிபட்டத் தீய பயனற்ற வாழ்க்கை வாழவில்லை என்பதைத் தெரிந்துகொண்டால், முயற்சி செய்து பயன்தரும் நிலையை உருவாக்கி மாசுகளை மேலும் ஒழிக்க வேண்டும்.
One may not be skilled in the habit of other’s thoughts but at least one can make this resolve: ‘I will be skilled in the habit of my own thoughts.’ This is how you should train yourself, and this is how it is done. A woman, a man or a youth fond of adornment, examining their reflection in a bright, clear mirror or a bowl of clear water might see a blemish or pimple and try to remove it. And when they sees it is no longer there, they would be pleased and satisfied and thinks: ‘It is an advantage to be clean.’ In the same way, one's introspection is most fruitful in good states when one thinks: ‘Am I usually greedy or hateful, overcome by sloth and torpor, with agitated mind, filled with doubt or anger, or am I not? Do I usually live with soiled thoughts, or with clean thoughts, with body passionate or not, sluggish or full of energy, uncontrolled or well controlled?’ If, on self-examination, one finds that he does live with these evil unprofitable states, then he must put forth extra desire, effort, endeavor, exertion, energy, awareness and attention to abandon them. And if on self-examination he finds that he does not live with the evil unprofitable states, he should make an effort to establish those profitable states and further destroy the defilements.
A.V,92
111. ஒரு சமயம் அண்ணல் காசியில் நீண்ட நாள் தங்கியிருந்தபின் உருவிலா நோக்கிப் பயணப் பட்டார். சாலையை விட்டுத் திரும்பியபின் மரங்களடர்ந்த ஒரு சோலையில் நுழைந்து ஒரு மரத்தடியில் அமர்ந்தார். அதே நேரத்தில் நல்ல வசதிமிக்க குடும்பத்தில் பிறந்த முப்பது நண்பர்கள் தங்கள் மனைவிமார்களுடன் அதே சோலையில் மகிழ்ந்திருந்தனர். அந்நண்பர்களில் ஒருவனுக்கு மட்டும் மனைவி இல்லை. ஆதலால் அவனுக்காக ஒரு விலைமகளை அழைத்து வந்திருந்தனர். அவர்கள் அனுபவித்து மகிழ்ந்து கொண்டிருக்கும் போது அவ்விலைமகள் அவர்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டாள்! அதனால் அந்நண்பர்கள் அவளைத் தேடிச் சுற்று முற்றும் அலைந்து கொண்டிருந்த பொழுது அண்ணல் ஒருமரத்தடியில் அமர்ந்திருப்பதைக் கண்டனர். அவரை அணுகி:
'அண்ணலே நீங்கள் ஒரு பெண்ணை இங்கு பார்த்தீர்களா?' என்று வினவினர்.
'என்ன இளைஞர்களே அவளிடம் உங்களுக்கு என்ன வேண்டியிருக்கிறது?' என்று கேட்டார்.
அவர்கள் நடந்தவற்றை கூறி, அதற்காகத்தான் அவளைத் தேடுவதாகக் கூறினர்.
அப்போழுது அண்ணல் கேட்டார்:
'எது சிறந்ததென நினைக்கிறீர்கள்? அவளைத் தேடுவதா அல்லது உங்களையே தேடிக்கொள்வதா?'
'உண்மை தான் அண்ணலே. எங்களையே தேடிக் கொள்வதே சிறந்ததாகும்.'
'அப்படியென்றால் அமருங்கள். உங்களுக்கு நான் அறத்தைப் போதிக்கிறேன்.'
நண்பர்களெல்லாம் அமர்ந்த பிறகு அண்ணல் அவர்களுக்கு முன்னேற்றத்திற்கான பயனுள்ள சிறந்ததொரு சொற்பொழிவினை நிகழ்த்தினார். ஒழுக்கம், சொர்க்கம், ஆபத்தான, பயனற்ற, புலனுணர்வுகளால் விளையும் தீமைகள், அவற்றைத் தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் ஆகியவற்றைப் பற்றிக் கூறினார். அவர்கள் உள்ளம் பண்பட்ட நிலைக்கு வந்து விட்டதை உணர்ந்த அண்ணல், அவர்கள் வளையக் கூடிய பதப்பட்ட நிலையிலிருக்கிறார்கள் என்பதையுணர்ந்து, மாசுகள் இல்லாததையும், மேம்பட்ட நிலையில் இருப்பதையும் மகிழ்ச்சியுடன் இருப்பதையும் உணர்ந்து புத்தர்களுக்கு மிக உயர்ந்த போதனைகளான துக்கம், துக்க உற்பவம், துக்க நிவாரணம், நிவாரண மார்க்கம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
At one time, the Lord, having stayed as long as he liked at Benares, set off for Uruvela. Then turning off the road, he entered a woodland grove and sat down at the foot of a tree. Now at that time a group of about thirty high-born friends and their wives were enjoying themselves in that same woodland. One of the friends had no wife, so a prostitute had been brought along for him, and while they were enjoying themselves she took their belongings and run away. So these friends began looking around for the woman and as they roamed about they saw the Lord at the foot of the tree. They approached him and asked: “Lord, have you seen a woman?”
“What, young men, have you to do with a woman?”
So they told the Lord what had happened and why they were looking for the woman. And the Lord said to them: “What do you think? Which is better? To seek for this woman or to seek for yourself?”
“Well then, sit down and I will teach you Dhamma.”
So those friends sat down and the Lord gave a progressive talk, that is, on virtue, on heaven, on the danger, the futility and the disadvantages of sense pleasures and the advantages of giving them up. Then, when the Lord knew that their minds were ready, malleable, free from hindrance, uplifted and gladdened, he explained to them the teaching which is unique to the Buddhas - suffering, its cause, its overcoming and the way to its overcoming.
Vin.I,23
112. சூதாட்டத்திற்கு அடிமையானால் அவர்களுக்கு ஆறு ஆபத்துக்களிருக்கின்றன. சூதாட்டத்தில் வெற்றி பெற்றால் அவன் மீது மற்றவர்களுக்கு வெறுப்பு அதிகரிக்கும்; தோற்றால் செல்வம் இழந்ததை நினைத்து வருந்துவான்; அவன் செல்வத்தை இழந்துவிடக்கூடும்; நீதிமன்றத்தில் அவன் சொல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது; நண்பர்களும், அலுவலர்களும் அவனை வெறுத்தொதுக்குவர்; ஒரு சூதாட்டக்காரனால் தன் மனைவியைக் காப்பாற்ற முடியாதென்பது மக்களின் எண்ணமாதலால் அவனைத் திருமணத்திற்குத் தகுதியற்றவனென நினைப்பர்.
There are these six dangers of being addicted to gambling. In winning one begets hatred, in losing one mourns the loss of wealth, loss of wealth, one's word is not accepted in court, one is avoided by both friends and officials, and one is not sought after for marriage because people say a gambler cannot support a wife.
D.III,184
113. ஒரு அன்பான நண்பன் தரும் உணவே மிக ருசியானது. மிகப் பக்குவத்தோடு செய்யப்பட்ட சுவைமிக்க இனிப்புத் தின்பண்டம் கூட, அன்போடு தரப்பட்ட சாதாரணக் கஞ்சிக்கு ஈடாகாது.
No food is tastier than that given by a loving friend. Even the sweetest confection made with care is not as tasty as the plainest gruel given with love.
Ja.III,142*
114. ஜீவிகா சொன்னார்: "மிக உயர்ந்த பரிசுத்த நிலை அன்பில்தான் நிலைத்திருக்கிறது என்று நான் கேள்விப் பட்டிருக்கிறேன். அதற்குச் சான்று நம் அண்ணலே. அவர் அன்பில்தான் நிலைத்திருக்கிறார்." அண்ணல் பதில் அளித்தார்: "தீய எண்ணங்களுக்கு இடங்கொடுக்கக் கூடிய பேராசை, வெறுப்பு மற்றும் ஏமாற்றம் ஆகியவற்றைத் ததாகதர் கைவிட்டு விட்டார். வேறோடு அறுத்தெறிந்து விட்டார். வெட்டப்பட்ட பனை மரத்தின் அடிப்பகுதி எப்படி மறுபடியும் மரமாகதோ அதைப்போல அவற்றை மீண்டும் தோன்றா வண்ணம் களைந்தெறிந்து விட்டார். இதைப்பற்றித்தான் நீ கூறுகிறாய் என்றால், ஜீவிகா, நான் உன் சொல்லை ஏற்றுக் கொள்கிறேன்."
Jivaka said: “I have heard this said that it is sublime to abide in love and the Lord is proof of this because I can see that he abides in love.” The Lord replied: “Any lust, hatred or delusion which could give rise to ill will has been abandoned by the Tathagata, cut off at the root, made like a palm tree stump, finished so that it cannot grow again in the future. If that is what you are referring to Jivaka, then I agree with you.”
M.I,369*
115. ஒரு முறை ஒரு துறவி சீதபேதியால் பாதிக்கப்பட்டு அவருடைய கழிவுகள் கிடந்த இடத்திலேயே விழுந்து கிடந்தார். அப்போது துறவிகளின் விடுதிகளுக்கு வருகை தந்த அண்ணலும் ஆனந்தரும் அந்தத் துறவி கிடந்த இடத்திற்கு வந்தனர். அண்ணல் துறவியைப் பார்த்து,
'துறவியே, உங்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று வினவினார்.
'நான் சீதபேதியால் துன்புறுகிறேன்!'
'உங்களைக் கவனிக்க யாருமே இல்லையா?'
'இல்லை அண்ணலே!'
'மற்ற துறவிகள் ஏன் உங்களைக் கவனிக்கவில்லை?'
'ஏனென்றால் என்னால் அவர்களுக்கு ஒரு பயனும் இல்லை அண்ணலே!'
பின்னர் அண்ணல் ஆனந்தரை அழைத்து,
'நீர் கொண்டு வாருங்கள். நாம் இந்தத் துறவியைக் குளிப்பாட்டுவோம்' என்றார். ஆனந்தர் நீர் கொண்டு வந்தார். அண்ணல் நீரைத் துறவியின் மீது ஊற்ற ஆனந்தர் தேய்த்துக் குளிப்பாட்டினார். அண்ணலும் ஆனந்தரும் அத்துறவியைத் தூக்கிப்போய் ஒரு படுக்கையில் கிடத்தினர். பிறகு அண்ணல் மற்றத் துறவிகளையெல்லாம் அழைத்து, 'துறவிகளே நீங்கள் ஏன் அந்த நோய்வாய்ப்பட்டிருக்கும் துறவியைக் கவனிக்கவில்லை?' என்று கேட்டார்.
'ஏனென்றால் எங்களுக்கு அவரால் எந்தப் பயனும் இல்லை அண்ணலே!' என்றனர்.
'உங்களைக் கவனிப்பதற்கு உங்களுக்கு அன்னையோ தந்தையோ இல்லை. நீங்கள் ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ளவில்லையென்றால் பின் யார் தான் கவனிப்பார்? எனக்குப் பணிவிடை செய்ய விரும்புவோர் நோயாளிகளுக்கும் பணிவிடைசெய்ய வேண்டும்.'
Now at that time a certain monk was suffering from dysentery and lay where he had fallen in his own excrement. The Lord and Ananda were visiting the lodgings and they came to where the sick monk lay and the Lord asked him: “Monk, what is wrong with you.”
“I have dysentery, Lord.”
“Is there no one to look after you?”
“No, Lord.”
“Then why is it that the other monks do not look after you?”
“It is because I am of no use to them, Lord.”
Then the Lord said to Ananda: “Go and fetch water so we can wash this monk.” So Ananda brought water and the Lord poured it out while Ananda washed the monk all over. Then taking the monk by the head and feet, the Lord and Ananda together carried him and laid him on a bed. Later, the Lord called the monks together and asked them: “Why monks, did you not look after that sick monk?”
“Because he was of no use to us, Lord.”
“Monks, you have no mother or father to look after you. If you do not look after each other who will? He who would nurse me, let him nurse the sick.”
Vin.I,301
116. 'தீய எண்ணத்தைத் தவிர்ப்பதற்கு ஐந்து வழிகள் இருக்கின்றன!' என்று போற்றுதற்குரிய அறவண அடிகள் சாரிபுத்திரர் கூறினார்.
அவை எவை?
"ஒருவனை எடுத்துக் கொள்வோம். அவன் செயல்களில் தூய்மையற்றவனாக இருப்பான்; ஆனால் பேச்சில் அல்ல. சான்றாக ஒரு துறவி கந்தல் துணியாலான துவராடையை உடுத்தியிருக்கிறார். வழியில் ஒரு கந்தல் துணியைக் கண்டால், இடது காலால் அழுத்தி, வலது காலால் அதை விரித்துப் பார்த்து அக்கந்தல் துணியைப் பயன்படுத்த முடியுமா என்று பார்த்துவிட்டுத் தன் வழியில் செல்வார். அதைப் போலவே சொற்களில் தூய்மையுடையவராக இருந்தும் செயலின் (நடவடிக்கையின்) வழிகள் தூய்மையற்றதாக இருப்பவரின் செயலை நிராகரித்து விடவேண்டும்; மதிப் பளிக்கக் கூடாது. அதற்குப் பதிலாக அவருடைய தூய்மையான வழிகளைப் (பேச்சைப்) பற்றி நினைக்க வேண்டும்.
மற்றொருவன் வார்த்தைகளில் தூய்மையற்று, செயலில் தூய்மையானவனாக இருக்கிறான். அவனிடம் துவேஷம் இல்லாமல் எப்படி நடந்து கொள்வது? உதாரணத்திற்கு ஒருவன்
வெப்பத்தால் சித்திரவதைப்படுத்தப்பட்டு, வெய்யிலில் உழன்று, களைப்புற்று, ஏங்கித் தாகத்தால் தவிக்கும் பொழுது, பாசி படர்ந்து, நீர்ச்செடிகள் வளர்ந்து, சேற்றுடன் இருக்கும் ஒரு குளத்தருகே வருகிறான்.
அக்குளத்தைக் கண்டவுடன் அதிலிறங்கிப் பாசியையும் நீர்ச்செடிகளையும் விலக்கிவிட்டு, இரண்டு கைகளாலும் அந்நீரை அள்ளிப் பருகிப் புத்துணர்வுடன் அவன் வழியே செல்கிறான். இதைப் போலவே ஒருவனின் வார்த்தைகள் தூய்மையற்று அவன் செயல்கள் தூய்மையுடையதாக இருந்தால் அவன் வார்த்தைக்கு மதிப்பளிக்கக் கூடாது. ஆனால் அவனுடைய தூய்மையான செயல்களைப் பற்றி நினைக்கலாம்.
ஒருவன் சொல்லிலும் செயலிலும் தூய்மையற்றவனாக இருந்து, ஆனால் மனத்தில் மட்டும் அவ்வப்போது தெளிவாகவும் அமைதியாகவும் இருந்தால் அவனிடம் எப்படி நடந்து கொள்வது? சான்றாக ஒருவன் வெப்பத்தால் (வெய்யிலால்) சித்திரவதைப்படுத்தப்பட்டு , வெப்பத்தில் உழன்று, களைப்புற்று ஏங்கித் தாகத்தால் தவிக்கும் பொழுது ஒரு பசுவின் காலடியால் ஏற்பட்ட பள்ளத்தில் மழைத்தண்ணீர் தேங்கி இருப்பதைப் பார்க்கிறான். 'நான் அந்நீரைக் கைகளால் அள்ளி அருந்த முயன்றால் அந்நீர் கலங்கிச் சேறாகிக் குடிப்பதற்குத் தகுதியற்றதாகிவிடும். ஆதலால் கை, கால்கள் நான்காலும் மண்டியிட்டு ஒரு பசு நீரைக் குடிப்பதைப்போல் குடிப்பதுதான் சரி' என்று நினைத்துக் குடித்துவிட்டு செல்கிறான். அதைப்போலவே ஒருவன் சொல்லிலும் செயலிலும் தூய்மையற்றவனாக இருந்து, ஆனால் மனத்தில் மட்டும் அவ்வப்போது தெளிவாக இருந்தால், அவனது செயலையும் சொல்லையும் நிராகரித்துவிடவேண்டும். மதிப்பளிக்கக்கூடாது. அவனுடைய தெளிவான எண்ணத்தையும் அமைதியான நிலையை மட்டும் நினைக்க வேண்டும்.
ஒருவனின் வழிகளனைத்தும் தூய்மையற்றதே. அவன் மனத்தாலும் அவ்வப்போதும் கூடத் தெளிவடைய முடியவில்லை. அமைதியும் கிடையாது. அவனைப் பற்றி என்ன நினைப்பது? சான்றாக ஒரு நோயாளி நோயில் வருந்தி கொண்டிருப்பவன், உடல் மிக மோசமான நிலையில் ஒரு நெடுஞ்சாலையில் நடந்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு முன்னும் பின்னும் ஒரு சிற்றூர் கூட இல்லை. கவனிக்கவும் ஆளில்லை. அவனை அடுத்த கிராமத்திற்கு அழைத்துச் செல்ல வழிகாட்டியும் இல்லை. வேறொரு மனிதன் அவனைக் கண்டு இரக்கப்பட்டுப் 'பாவம் இந்த மனிதன். அவனுக்கு கண்டிப்பாக உதவவேண்டும். இல்லையேல் அவன் துன்புறுவான்' என்று தனக்குள் நினைத்துக் கொள்வான். அதைப்போலவே ஒருவனின் வழிகள் தூய்மையற்றதாக இருந்தால், அவன் அவ்வப்போது கூட மனத்தெளிவு, அமைதி இல்லாமல் இருந்தால் அவன் மீது இரக்கம், கருணை, கழிவிரக்கம் முதலியவற்றுடன், 'பாவம் இவன் கெட்டவற்றையெல்லாம் விட்டுவிட்டு நன்மையை வளர்த்துக் கொள்ளவேண்டும். இல்லையேல் சாவிற்குப் பிறகு அவனுக்குத் தீய மறுபிறப்பே ஏற்படும்!' என்று நினைக்க வேண்டும்.
ஒருவன் சொல்லாலும், செயலாலும் தூய்மையானவனாக இருந்து தெளிவான மனச்சிந்தனையும் அமைதியுமுடையவனாகவும் இருந்தால், அவன் மீது ஏற்படும் தீய எண்ணங்களை எப்படி ஒழிப்பது? சான்றாக ஒருவன் வெப்பத்தால் சித்திரவதைப்பட்டு வெப்பத்தில் உழன்று களைப்புற்று ஏங்கித் தாகத்தால் தவிக்கும்போது இனிமையான, குளுமையான, தெளிவான பொய்கையைக் (குளத்தை) கண்டு ஓய்வெடுக்க நிழல்தரும் பலவித மரங்களிருக்கும் சோலையையும் கண்டால், அவன் அப்பொய்கையில் மூழ்கிக் குளித்து, நீரருந்திக் களைப்பைப் போக்கி அந்நிழலில் வந்து ஓய்வெடுப்பான். அதைப்போலவே அவனுடைய தூய்மை, தெளிவான மனச்சிந்தனை அமைதியை நினையுங்கள்."
Then Venerable Sariputta said: “There are these five ways of putting away malice that arises. What five? Take the case of a person who is impure in deed but not in word. Suppose a monk who wears rag robes were to see a rag on the road. He would hold it with his left foot, spread it out with his right foot to see if he could make use of it, and then proceed on his way. In the same way, one who is impure in deed but not in word, his deed ought to be disregarded. Think instead about his ways that are pure.
And concerning one who words are impure but who is pure in deed, how should malice be put away? Suppose a man, tortured and overcome by heat, exhausted, wearied, craving and thirsty were to come upon a pond overgrown with mossy slime and water plants. He would dive into the pond, scatter the water plants this way and that, cup his hands, drink, and then go his way refreshed. In the same way, one whose words are impure but who is pure in deed, his words ought to be disregarded. Think instead about his ways that are pure.
And what of one whose words and deed are both impure, but who occasionally attains mental clarity and calm? Suppose a man, tortured and overcome by heat, exhausted, wearied craving and thirsty, were to come upon a puddle in a cow's footprint. He might think: ‘If I drink from this puddle using my hands or a cup I will stir up the mud and make it unfit to drink. I will crouch down on all fours, bend low and drink, as does a cow?’ Then he does this. In the same way, one whose word and deed are both impure but who occasionally attains mental clarity and calm from time to time, his words and deeds ought to be disregarded. Think only of his clarity and calm.
And what of one whose words and deeds are both impure and who cannot even occasionally attain mental clarity and calm? Suppose a sick ailing and grievously ill man was going along a highway with no village in front or behind, unable to get proper food, medicine or attention, or even a guide to the next village. If another man were to see him, he might feel pity and he might say to himself: ‘This poor man! He should get help or he will suffer to his detriment.’ In the same way, for one whose ways are impure and who cannot even occasionally attain mental clarity and calm, pity, compassion and commiseration ought to arise and you should think: ‘This poor man! He should give up the bad and develop the good, or else after death he will have a bad rebirth.’
And concerning one whose words and deeds are both pure and who has mental clarity and calm, how should malice be put away? Suppose a man, tortured and overcome by heat, wearied, craving and thirsty were to come upon a pool of sweet, cool, limpid water, a lovely resting place shaded by all kinds of trees. He would dive into the pond, bathe, drink and then come out and lie in the shade. In the same way, of this person, think about this person’s pure words, deeds and his mental clarity and calm.”
A.III,186*
117. எதிரியொருவன் உனக்கு வேதனை உண்டாக்கியதாக வைத்துக்கொள்.
அது அவனுடைய பிரச்சனை.
அதனால் உன்மீது உனக்கேன் கோபம் உண்டாக்கிக் கொள்ள வேண்டும்?
உன் மனத்தை ஏன் வருத்திக் கொள்கிறாய்.
உன் மனத்தைக் கவனிப்பதுதானே உன் வேலை?
உன்மீது பாசமும் உதவியுமாயிருந்த
உன் குடும்பத்தை நீ அழவிட்டு, அவர்களை விட்டு வந்துவிட்டாய்.
அவ்வாறிருக்க உன் எதிரிகளை நீ ஏன் விட்டுவிடக் கூடாது
உனக்குத் துன்பத்தையே கொடுக்கும் கோபத்தை ஏன் விட்டுவிடக்கூடாது?
நீ தழுவும் அந்தக் கோபம்
நீ முயன்று வளர்க்கும் ஒழுக்கங்களின்
வேர்களையே தின்றுவிடும்.
அப்படிப்பட்ட முட்டாளாக எவன் இருப்பான்?
எவனோ தீமைகள் செய்தால்
உனக்கு ஏன் கோபம் வருகிறது?
அவனைப்போலப் போலியாக
அவன் செய்ததையே நீயும் செய்ய விரும்புகிறாயா?
சான்றாக, ஒருவன் உனக்குக் கோபமூட்ட
உன்னைத் தீயவை செய்ய ஆத்திரமூட்டுகிறான்.
கோபம் வர நீ ஏன் இடமளிக்கிறாய்?
அவன் விருப்பத்தைப்போல ஏன் நடந்து கொள்கிறாய்?
உனக்குக் கோபம் வந்தால்
அவன் துன்புறலாம், துன்புறாமலுமிருக்கலாம்.
ஆனால், உனக்கேற்படும் கோபவுணர்வால்
கண்டிப்பாக நீ துன்புறுவாய்.
எதிரிகள் கோபத்தால் குருடாகி
துன்பந்தரும் வழியில் நடந்து திருப்தியடைகின்றனர்.
நீயும் கோபத்தை வரவழைத்துக் கொண்டு
எதிரிகளைப் பின்பற்ற விரும்புகிறாயா?
எதிரியொருவன் உனக்கு ஆத்திரமூட்டி
நீ ஆத்திரமடைந்து துன்புற விரும்புகிறான்.
அந்தக் கோபம் தணியட்டும்,
தேவையில்லாக் கேடு வாரா திருக்கட்டும்.
Suppose an enemy has hurt you.
That is his business.
Why should you annoy yourself
And hurt your mind, which is your business?
In tears you left your family,
They who were so kind and helpful.
So why not leave behind your enemy
And the anger that brings so much harm?
This anger which you embrace
Eats away at the very roots
Of all the virtues you strive to develop.
Who would be such a fool?
Someone else does evil deeds
And you get angry. But why?
Do you wish to copy him
And act as he does?
Suppose to annoy someone,
Provokes you to do something evil.
Why allow anger to arise and thereby
Do exactly what he wants you to do?
If you get angry
Then maybe he will suffer, maybe not.
But by being angry yourself
You certainly will suffer.
If enemies blinded by anger
Are content to walk the path of woe,
Why should you follow them
By getting angry yourself?
If a foe provokes you
To hurt yourself by getting angry,
Let that anger subside.
Do not harm yourself needlessly.
Vism.300*
118. இல்வாழ்க்கை நடத்தும் சித்தா, துறவிகளைப் பார்த்து: 'ஒரு கறுப்பு இளங்காளை மாடும், ஒரு வெள்ளை இளங்காளை மாடும் ஒரு கயிற்றிலோ அல்லது ஒரு நுகத்தடியிலோ பிணைக்கப்பட்டிருக்கிறது. இப்போது ஒருவன் கறுப்புக் காளை மாடுதான் வெள்ளைக் காளை மாட்டிற்கு விலங்காக இருக்கிறது என்றோ அல்லது வெள்ளைக் காளை மாடுதான் கறுப்புக் காளைமாட்டிற்கு விலங்காக, சங்கலியாக, இருக்கிறதென்று கூறினால் அது சரியா?'
'இல்லை இல்வாழ்க்கை நடத்துபவரே. அவைகளே ஒன்றோடொன்று கயிற்றாலோ நுகத்தடியாலோ கட்டப்பட்டிருக்கின்றன.'
'அதைப்போலவே துறவிகளே பொருள்களுக்குக் கண்ணும் விலங்கல்ல; கண்ணுக்குப் பொருளும் விலங்கல்ல. அதன் பிணைப்பால் எழும் ஆசையும், ஆவலுமே விலங்காம், காலுக்குச் சங்கலியாம். காதும் ஒலிகளும், மூக்கும் மணமும், நாக்கும் சுவையும், மனமும் எண்ணங்களும் பிணைக்கும் சங்கலியல்ல; விலங்கல்ல. இவற்றின் இணைப்பால் (கூட்டால்) ஏற்படும் ஆசைகளே விலங்காம். கால்களைப் பிணைக்கும் சங்கலியாம்.'
'இல்வாழ்வோனே உமக்கிது நன்மைபயக்கும், நன்று கூறினீர். உமக்கு அறிவுக் கண்ணிருக்கிறது. அது புத்த பெருமானின் ஆழமான போதனைகளுக்கு ஏற்றது; முரணற்றது.'
Citta the householder said to the monks: “Suppose a black ox and a white ox were tied together by a rope or a yoke. Now, if one were to say that the black ox was the fetter of the white one, or that the white ox was the fetter of the black one, would one be speaking rightly?”
“No, they would not, householder. They are fettered by the rope or yoke.”
“Well, in the same way, monks, the eye is not the fetter of objects, nor is the object the fetter of the eye. Rather, the desire and craving that arises owing to the pair of them, that is the fetter. The ear and sounds, the nose and smells, the tongue and tastes, the mind and thoughts, are not fetters, but rather the desire and craving that arises owing to the pairs of them, that is the fetter.”
“Good for you, householder, well said. You have the eye of wisdom that is consistent with the Buddha’s deep teaching.”
S.IV,282
119. அண்ணலிடம் கிம்பிலா கேட்டான்: 'ததாகதரின் இறுதியான நிர்வாண நிலைக்குப் பின் நல்லறம் நீண்டு நீடிப்பதற்கு என்ன காரணமாக இருக்கும்?
'ததாகதரின் இறுதி நிர்வாண நிலைக்குப் பிறகு ஆண் துறவிகளும், பெண் துறவிகளும், இல்வாழ்க்கை நடத்தும் ஆண்களும் பெண்களும், ஆசிரியர் (புத்தர்) , அறம் (தம்மம்) , சங்கம் ஆகியவையுடன் பக்தியோடும் அக்கறையோடும், கவனமாகப் பயின்று, மனத்தை ஒருமுகப்படுத்தி நேர்மையாக நல்லெண்ணத்துடன் வாழந்தால் இந்த நல்லறம் நீண்டு நெடுங்காலம் நீடிக்கும்.'
Kimbila asked the Lord: “What will be the cause, what the reason why, after the Tathagata attains final Nirvana, the good Dhamma will last long?”
“If, after the Tathagata has attained final Nirvana, the monks and the nuns, the laymen and the laywomen, live with reverence and care towards the Teacher, the Dhamma and the Sangha, live with reverence and care towards the training, towards concentration, towards earnestness and towards goodwill, then the good Dhamma will last long.”
A.IV,84
120. இங்கிருக்கும் சில மூடர்கள், நான் ஒன்றை விட்டுவிடு என்று அறிவுறுத்திய பிறகு, 'சிறிய முக்கியத்துவமற்ற அது என்ன? இந்தத் துறவி சிறிய விசயங்களை மிகவும் வலியுறுத்துகின்றார்.' என்கிறார்கள். அதனால் அதை விட்டு விடாமல் , எனக்கு எதிராகவும் எனது பயிற்சியை வளர்த்துக் கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு எதிராகவும் அதிருப்தியை எழுப்புகின்றனர். இது அவர்களுக்கு உறுதியான திடமான பலமான பிணைப்பாகிறது. எளிதில் அறுக்கமுடியாத இந்த பிணைப்பு ஒரு கனமான கட்டையைப் போன்றது.
Some foolish people here, on being advised by me to give something up, say: ‘But what is this small and insignificant matter? This monk lays too much stress on minor things.’ And so they do not give up that thing and they cause dissatisfaction to be nursed against me and those who do desire the training. This becomes a strong, solid and stout bond for them, a bond not easily worn away, like a thick block of wood.
M.I,449
No comments:
Post a Comment