Tuesday, February 5, 2013

புத்தரின் வார்த்தைகள்(MAy)

புத்தரின் வார்த்தைகள்
புனித பௌத்த இலக்கியத்திலிருந்து தினசரி படிக்க வேண்டியவை
ஆங்கிலத்தில் வணக்கத்துக்குரிய  எஸ். தம்மிக்கா
தமிழில் திரு தி. சுகுணன், எம். ஏ.

THE WORDS OF THE BUDDHA
Daily Readings from the Buddhist Scriptures
By Bhante S. Dhammika

மே 121-151 May

121. தீவிரமாக, மும்முரமாக இருப்பவன் நம்பிக்கையுடையவன், அவநம்பிக்கையுடையவனல்லன். மும்முரமாக இருப்பவன் ஆற்றல் வாய்ந்தவன், சோம்பேறியல்லன். மும்முரமாக இருப்பவன் நிலையான எண்ணமுடையவன், குழப்பமுடையவனல்லன். மும்முரமாக இருப்பவன் தெளிவான அறியும் சக்தியையுடையவன், குழம்பிய அறிவுடையவனல்லன். மும்முரமாக இருப்பவன் பலம் வாய்ந்த அறிவுடையவன், பலவீனமானவனல்லன். இவ்வைந்தையும் நீங்கள் உங்களுக்குள் நிலைநாட்டிக் கொண்டபின், உங்களுக்குள் மேலும் ஆறுவகைக் குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ததாகதரை நீங்கள் கீழ்க்காணுமாறு நினைக்க வேண்டும்: 'இப்படிப்பட்டவர் நம் அண்ணல், மேன்மையானவர், முழுமையாகப் பேரறிவு பெற்ற புத்தர், சரியான உலக அறிவும் நன்னடத்தையும் உள்ளவர், மகிழ்ச்சியுடன் உலகை அறிந்தவர், மேலோங்க முடியாத மனிதர்களுக்குப் பயிற்சியளிக்கும் வழிகாட்டி, தேவருக்கும் மனிதருக்கும் ஆசிரியர், ஒரு புத்தர், தலைவனான அண்ணல்.'

அறத்தைப் பற்றி நீங்கள் இவ்வாறு நினைவுகூரல் வேண்டும்: 'அண்ணலின் அறம் அழகாகப் போதிக்கப்பட்டது, உடனடியாகத் தெளிவாவது, கால வரையற்றது, அனைவரையும் வரவேற்றுப் பார்த்துப் புரிந்து கொள்ள அழைக்கிறது, ஆன்மீகத்தை வளர்க்கிறது, அறிவுள்ளவர் தாங்களாகவே புரிந்து கொள்ளக் கூடியது.'

நீங்கள் சங்கத்தைப் பற்றிக் கீழ்க்காணுமாறு நினைவு கூர வேண்டும்: 'அண்ணலின் மாணவர்கள் சிறப்பாகப் பயிற்சி செய்துள்ளனர், நேர்த்தியாகப் பயிற்சி செய்துள்ளனர், முறையாகப் பயிற்சி செய்துள்ளனர், ஒழுங்காகப் பயிற்சி செய்துள்ளனர். அதாவது நான்கு ஜோடிகள் - எட்டு வகையான - மேன்மையானோர்; அவர்களே அண்ணலின் மாணவர்கள். அவர்கள் நன்கொடை பெறத் தகுதியானவர்கள், அவர்கள் உபசரிக்கத் தகுதியானவர்கள், பரிசு பெறத் தகுதியானவர்கள், மதிக்கத் தக்கவர்கள். அவர்கள் உலகில் ஒப்புவமை கூற முடியாத நன்மையின் மூலாதாரங்கள்.'
உங்கள் ஒழுக்கங்களை நீங்கள் இவ்வாறு நினைவுகூர வேண்டும்: 'அவை முழுமையானவை, பூர்த்தியானவை, கறையற்ற, மாசற்ற, முழுச் சுதந்திரமளிப்பவை, அறிஞர்கள் போற்றுபவை, தூய்மையான மனத்தை ஒரு நிலைப்படுத்த அழைத்துச் செல்பவை.'

உங்கள் தயாள குணத்தைக் கீழ்க்காணுமாறு நினைவு கொள்ள வேண்டும்: 'இது எனக்கு இலாபமே. உண்மையிலேயே இது ஒரு மாபெரும் இலாபமாகும். சிறுமைக் குணம் நிறைந்தவரிடையே, தூய மனத்துடன் சிறுமையின்றி என் வீட்டில் வசிக்கிறேன். நான் திறந்த கையினனாக (எதையும் மறைக்காதவனாக), தூய்மையான கையுடையவனாக, ஒருவர் என்னிடம் வந்து சலுகை கேட்கும் நிலையில், பொருள்களைப் பிறர்க்குக் கொடுப்பதில், பொருள்களை மற்றவரோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைபவனாக இருக்கிறேன்.'

மேலும் கடவுளர்பற்றிக் கீழ்க்காணுமாறு நீங்கள் நினைவுகூர வேண்டும்: 'நான்கு பேரரசர்களின் கடவுளர், முப்பத்தி மூன்று கடவுளர், யமனின் கடவுளர், மகிழ்ச்சியின் கடவுளர், ஆக்கத்தில் உவகையுறும் கடவுளர், மற்றவர்கள் உருவாக்கியதை வழிநடத்தும் சக்திபடைத்த கடவுளர், பிரமனுடனும் அதற்கு அப்பாலும் இருக்கும் கடவுளர் இருக்கின்றனர். இவ்வுலகில் பிறந்து இறந்தபின் அவர்கள் சொர்க்கத்தில் கடவுளராக மறுபிறப்பெடுத்தனர். அப்படி நல்ல மறுபிறப்பெடுப்பதற்கான ஒழுக்கம், கல்வி, தாராள மனப்பான்மை, மெய்யறிவு ஆகிய பண்புகள் என்னிடமும் இருக்கிறது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.'

எப்போது ஒரு பண்பிற் சிறந்த மாணவன் இவற்றையெல்லாம் நினைவுகூர்கிறானோ, அவனது மனம் பேராசை, பகைமை, ஏமாற்றம் அல்லது மாயை போன்றவற்றிலிருந்து விடுதலை பெறுகின்றது. அப்பொழுது அவன் மனம் நேர்மையானதாக, அவற்றில் பதிந்ததாக, நேர்மையான உள்ளத்தோடு, நன்மையின் மகிழ்ச்சியை, அறத்தால் ஏற்படும் மகிழ்ச்சியை, அறத்துடன் செல்லும் மகிழ்ச்சியை விவரிக்கிறான். அதில் ஒருவன் மகிழ்ச்சியடைகிறான். குதூகலப்படுகிறான். குதூகலத்தால் உடல் அமைதியடைகிறது. அமைதி நிறைந்த உடலால் அவன் ஆனந்தமடைகிறான். மகிழ்ச்சியினால் ஒருவனின் மனம் ஒருநிலைப்படுகிறது. 'பண்பு சார்ந்தமாணவன், புத்த தம்ம சங்கத்தையும், ஒழுக்கம், தாராள மனப்பான்மை, அறவோர் ஆகியோரை நினைவு கொள்ளும் மாணவன் வசதியுடன் வாழாதவரிடையே வசதியுடன் வாழ்வான்' என இப்படிப்பட்டவர்களைப் பற்றிச் சொல்லப்படுகிறது.

One who is serious is a believer, not an unbeliever. One who is serious is energetic, not lazy, of steady not distracted mindfulness, of clear not confused comprehension and with strong wisdom, not weak wisdom. When you have established these five things in yourself, you should also make six other things grow within you. You should recollect the Tathagata like this: ‘Such indeed is the Lord, a Noble One, a fully enlightened Buddha, with perfect knowledge and conduct, happily attained, a knower of the worlds, a guide unsurpassed of those to be trained, a teacher of gods and humans, a Buddha, the Lord.’
You should recollect the Dhamma like this: ‘Beautifully taught is the Lord’s Dhamma, immediately apparent, timeless, of the nature of a personal invitation, progressive, to be attained by the wise, each for themselves.’
You should recollect the Sangha like this: ‘Happily and straightly faring are the Lord’s disciples, correctly and methodically faring are the Lord’s disciples, namely, the four pairs of individuals, the eight types of persons. These disciples of the Lord are worthy of offerings, of hospitality, of gifts and salutation with folded hands; they are an incomparable source of goodness in the world.’
You should recollect your own virtues as being complete, whole, unspotted, untarnished, freedom-giving, as being praised by the wise, pure and leading to concentration.
You should recollect your own generosity like this: ‘It is a gain for me. Indeed, it is a great gain, that amidst those overcome by meanness, I live at home with the mind cleansed of meanness. I am open-handed, pure-handed, delighting in sharing, one to ask a favour of, one who rejoices in giving.’
Further, you should recollect the gods in this way: ‘There are the gods of the Four Great Kings, the Thirty-three Gods, the gods of Yama, the gods of delight, the gods who delight in creation, those who have power over the creations of others, those in the company of Brahma and those beyond that. I, too, have the faith, the virtue, the learning, the generosity, and the wisdom by which these gods, on dying here, were reborn there in heaven.’
At a time when a noble disciple recollects all these things, his mind is free from greed, hatred and delusion. At that time, his mind is straight and fixed upon those things, and with a straight mind he expresses the gladness of the good, the gladness of the Dhamma, and the gladness that goes with Dhamma. In one like this gladness arises, from gladness comes joy, because of joy the body is tranquil, with a tranquil body one is happy, and the mind of one who is happy becomes concentrated. This is said of a person like this: ‘The noble disciple who recollects the Buddha, the Dhamma and the Sangha, who recollects virtue, generosity and the gods - that disciple walks evenly among those who dwell unevenly.’
A.V,329

122. ஒழுக்கங்களை முழுமையாகத் தூய்மைப் படுத்துவதற்குச் சக்தி அல்லது முயற்சி எவ்வாறு உதவுகிறது?  இங்கு ஒருவன் ஒழுக்கமானவனாக இருக்கிறான். அவன் நீதி போதனைகளைக் கடைப்பிடித்து அதன்படி நடக்கிறான். இத்தீர்மானத்தை ஒழுக்கத்தின் முழுமையான தூய்மையாக்கம் எனக் கூறலாம்: 'முழுமை பெறாதிருந்தால், நான் முழுமையான ஒழுக்கத்தின் தூய்மையைக் கொண்டு வருவேன். அது முழுமையானதாக இருந்தால், பிற்சேர்க்கையாகப் பேரறிவை அங்குமிங்கும் சேர்ப்பேன்.' இதுவே ஒழுக்கத்தின் முழுமையான தூய்மையாக்கம் எனலாம். ஆசை, முயற்சிகள், தொடர் முயற்சி, நீடித்திருத்தல், நிறைந்த மனம் இதற்காகப் பயன்படுத்தப்படலாம். இவையே ஒழுக்கத்தின் முழுமையான தூய்மையாக்கத்திற்காகப் பயன் படுத்தப்பட்ட காரணிகளாம்.

And what is the factor of exertion for the complete purification of virtues? In this case, one is virtuous, undertaking and practicing the precepts. This resolve is called the complete purification of virtue: ‘I will bring to perfection the purification of virtue if it is incomplete, and if it is complete I will supplement it here and there with wisdom.’ This is called the complete purification of virtue. The desire, the effort, the exertion, the endeavor, the persistence, the mindfulness and attention applied to this is called a factor in the complete purification of virtue.
A.II,195

123. நம்பிக்கையில் உறுதியாக இருந்து, மெய்யறிவில் பலவீனமாக இருந்தால், எதிலும் குறையே காணாமல் அடிப்படையற்ற நம்பிக்கையுள்ளவனாகிறான். அதாவது முட்டாள்தனமாக ஒன்றுக்கும் உதவாத பொருளின் மீது நம்பிக்கை வைக்கிறான்.
ஒருவன் அறிவில் உறுதியாக இருந்து, நம்பிக்கையில் பலவீனமாக இருந்தால், அவனுக்கு எதையுமே கபட நோக்கத்தோடு செய்யத்தோன்றும். மருந்தால் ஏற்பட்ட நோயைப்போல் இந்நோயைக் குணப்படுத்துதல் கடினம்.
ஒருவனுக்கு அறிவும் நம்பிக்கையும் சமமாக இருந்தால் எங்கு அடிப்படை ஆதாரங்கள் இருக்கின்றனவோ அங்கு மட்டுமே நம்பிக்கையிருக்கும். தகுதியான பொருளின் மீதே நம்பிக்கையிருக்கும்.

One strong in faith but weak in wisdom has uncritical and groundless confidence. One strong in wisdom but weak in faith errs on the side of cunning and is as hard to cure as one whose sickness is caused by a medicine. When faith and wisdom are balanced, one has confidence only where there are grounds for it.
Vism.129*

124. நிகந்த நாட்டப்புத்தரைப் பின்பற்றும் அசிபந்தகபுத்தர் அண்ணல் தங்கியிருந்த இடத்திற்கு ஒருமுறை வந்தபோது அண்ணல் அவரைப் பார்த்து: 'நிகந்த நாட்டபுத்தர் அவருடைய மாணவர்களுக்கு எந்தக் கோட்பாடு பற்றிப் போதிக்கிறார்?' என்று கேட்டார்.

"அண்ணலே, எவனொருவன் கொலை செய்கிறானோ, பொய் சொல்கிறானோ, சோரம் போகிறானோ, அவன் நரகத்திற்குப் போகிறான். ஒருவன் தன் வழக்கமான செயலுக்கேற்பத் தீர்ப்பை அடைகிறான் என நாட்டபுத்தர் போதிக்கிறார்." என்றார்.

"ஆனால், ஒருவன் தன் குணத்திற்கேற்றபடி செயற்படுகிறான் என்றால், அதற்கேற்ற தீர்ப்பை அவன் அடைகிறான் என்றால், நாட்டப்புத்தரின் போதனைப்படி எவருமே நரகத்திற்குச் செல்லமாட்டார்கள். நீ என்ன நினைக்கிறாய்? ஒரு மனிதன் இரவிலோ பகலிலோ கொலை செய்கிறான் அல்லது அவ்வப்போது கொலை செய்கிறான் என்றால் அவனுக்குப் பழக்கமான நேரம் எந்த நேரம்? அவன் கொலை செய்யும் நேரமா அல்லது கொலை செய்யாத நேரமா?"

"அண்ணலே, அவன் கொலை செய்யாத நேரமே அவனுக்கு நிரம்பப் பழக்கமான நேரம்."

"ஓர் ஆசிரியர் இதைப் போன்ற ஒரு கோட்பாட்டைப் போதிக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவரைப் பின்பற்றுவோர்க்கும் அவ்வாசிரியர் மீது நம்பிக்கையிருக்கிறது. 'என் ஆசிரியர் எவனொருவன் கொலை செய்கிறானோ, திருடுகிறானோ, பிறர் மனைவியை நாடுகிறானோ அல்லது பொய் பேசுகிறானோ அவன் நரகத்திற்குப் போவான் எனக் கூறுகிறார். நான் இவற்றையெல்லாம் செய்திருப்பதால் நான் நரகத்திற்குக் கண்டிப்பாகப் போவேன்.' என்று நினைப்பான். இந்த எண்ணத்தோடு அவன் தொடர்ந்து தவறு செய்து கொண்டேயிருப்பான். அப்பழக்கத்தை விட்டுவிடமாட்டான். அதை நினைத்துக் கொண்டே, அதையே விடாமல் தொடர்வதால் அவன் நரகத்திற்கே செல்வான்.

ததாகதர் ஒருவர் உலகில் தோன்றுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் மிக உறுதியாகக் கொலை, களவு, விபச்சாரம், பொய் பேசுதல் ஆகியவற்றைக் கண்டித்து: 'இவற்றைச் செய்யாதீர்கள்.' எனப் போதிக்கிறார். அவர் மீது நம்பிக்கை வைத்து அவரைப் பின்பற்றுபவன் 'அண்ணல் பலவழிகளில் மிக உறுதியாகக் கொலை, களவு, விபச்சாரம், பொய்மை ஆகியவற்றைக் கண்டிக்கிறார், அதிலிருந்து விலகியிருக்க, தவிர்க்கச் சொல்கிறார். நான் இவற்றைச் செய்திருக்கிறேன். அது சரியானதல்ல. அது நல்லதல்ல. மேலும் அவற்றை இப்போது அழிக்க முடியாதென்பதால் அப்படிச் செய்து விட்டேனே என்று நினைக்கும்போது வருந்துவேன்.' என்று நினைத்து அப்படிப்பட்ட செயல்களைச் செய்யாதிருப்பான். இவ்வாறு அவன் தீய செயல்களைத் தவிர்ப்பான். கொலையைக் கைவிடுவதால் அவன் கொலையைத் தவிர்க்கிறான். திருடுவதைக் கைவிடுவதால் அவன் திருட்டைத் தவிர்க்கிறான். விபச்சாரத்தைக் கைவிடுவதால் அவன் விபச்சாரத்தைத் தவிர்க்கிறான். பொய் பேசுவதைக் கைவிடுவதால் அவன் பொய்யைத் தவிர்க்கிறான். கோள்சொல்லல், கடுஞ்சொல், தேவையற்ற பேச்சுகள் முதலியவற்றைக் கைவிடுவதால் அவன் அவற்றைத் தவிர்க்கிறான். பேராசையைக் கைவிடுவதால் அவன் தாராள குணமுடையனாகிறான். பகைமையைக் கைவிடுவதால் அவன் இரக்கமுடையவனாகிறான். தீய நோக்கத்தைக் கைவிடுவதால் அவன் நல்ல நோக்கமுடையவனாகிறான்.

இந்த பண்பு சார்ந்த மாணவன், பேராசை, பகைமையிலிருந்து விடுபடுவதால், மனம் நிறைந்தவனாக, மனத்தை ஒருநிலைப்படுத்தியவனாக, குழப்பமற்றவனாக வாழ்கிறான். உலகின் நான்கு கால்பாகமும், மேலே, கீழே, குறுக்கே, எங்கும், எல்லா உயிரினங்களும், இந்த முழு உலகமும் அவன் மனம் அன்பால், கருணையால், மற்றவர் மகிழ்ச்சியில் தானும் மகிழ்ந்து, மனச் சாந்தியுடன் நிரம்பிப் பரவி பிரம்மாண்டமாக வளர்கிறது. பலமான சங்கு ஊதும் ஒருவன் சிறு முயற்சியாலேயே ஊரின் நான்கு கால்பாகங்களுக்கும் அறிக்கை விடுவதுபோல, அன்பால், கருணையால், மற்றவர் மகிழ்ச்சியில் தானும் மகிழும் குணத்தால், அமைதியால் யாரையும், எதையும் விடாமல் கவர்கிறான்."


The Lord asked, Asibandhakaputta, a follower of Nigantha Nataputta: “What doctrine does Nigantha Nataputta teach his disciples?”
“Lord, Nataputta teaches that whoever kills, steals, commits sexual misconduct or lies - that person goes to hell. According to how one habitually acts, one goes to one’s destiny.”
“But if you say that as one acts habitually one goes to one's destiny, then according to Nataputta’s teaching, no one would go to hell. What do you think about this? If a man say, kills by day or night or from time to time, which time is the most habitual to him? When he kills or when he is not killing?”
“Well, Lord, the time when he is not killing is most habitual to him.”
“Now, say a teacher teaches a doctrine such as this and a follower has faith in such a teacher. That follower would think: ‘My teacher says that whoever kills, steals, commit sexual misconduct or lies goes to hell. Now I have done these things so I will to go to hell.’ And so, holding this view, not giving it up, thinking about it, ruminating over it, he does go to hell. But say a Tathagata arises in the world. He censures, strongly censures, killing, stealing, sexual misconduct and lying, saying: ‘Abstain from these things.’ Then say a follower has faith in such a teacher, that follower would think: ‘The Lord in many ways censures, strongly censures, killing, stealing, sexual misconduct and lying, saying: Abstain from these things. Now I have done such things. That is not well done, it is not good. Moreover, I may be remorseful when I remember that such deeds cannot be undone.’ Thinking in this way, he abandons such deeds. In this way he goes beyond evil deeds. By abandoning killing, he abstains from killing, by abandoning stealing, sexual misconduct, lying, backbiting, harsh speech, and idle chatter he abstains from all these things. By abandoning greed, he becomes generous, by abandoning hatred he becomes kind, and by abandoning wrong view he becomes one with perfect view. This noble disciple, freed from greed and hatred, not bewildered but mindful and concentrated, abides suffusing the four quarters of the world, above, below, across, everywhere, all beings, the whole world with a mind filled with love, compassion, sympathetic joy and equanimity that is widespread, grown great. Just as a strong conch blower with but little effort gives notice to the four quarters, in the same way, nothing whatsoever is left out of that love, that compassion, that sympathetic joy or that equanimity.”
S.IV,317

125. மனச்சாட்சியை இரண்டு பொருள்கள் எரிக்கும். அவை எவை? ஒருவன் ஒழுக்கமற்ற செயல்களை உடலால், சொல்லால், மனத்தால் செய்தால் அல்லது ஒழுக்கமுடைய செயல்களை உடலால், சொல்லால், உள்ளத்தால் செய்யத் தவறிவிட்டால், இவற்றை அவன் நினைக்க ஆரம்பிக்கும்போதே, மன வருத்தத்துடன் தன்னை எரித்துக் கொள்வான்.
There are two things that burn the conscience. What two? Say a person has done immoral acts of body, speech or mind, or has failed to do virtuous acts of the body, speech or mind. When he thinks of this he burns with remorse.
A.I,49

126. இரண்டு பரிசுகள் இருக்கின்றன. ஒன்று உலகஞ் சார்ந்தது. மற்றது சமயஞ் சார்ந்தது. இவ்விரண்டில் சமயஞ்சார்ந்த பரிசே உயர்ந்ததாம்.
இரண்டு விதமாகப் பகிர்ந்து கொள்ளலாம். ஒன்று உலகஞ் சார்ந்தது. மற்றது சமயஞ் சார்ந்தது. இவ்விரண்டில் சமயஞ்சார்ந்த பங்கே உயர்ந்ததாம்.
இரண்டு விதமான அன்புச் செயல்களிருக்கின்றன. ஒன்று உலகஞ் சார்ந்தது. மற்றது சமயஞ் சார்ந்தது. இவ்விரண்டில் சமயஞ்சார்ந்த அன்புச் செயலே உயர்ந்ததாம்.

There are these two gifts, the worldly and the spiritual, and of these two, the spiritual gift is the highest. There are these two types of sharing, the worldly and the spiritual, and of these two, the spiritual sharing is the highest. There are these two acts of kindness, worldly and the spiritual, and of these two, the spiritual act of kindness is the highest.
It.98

127. அவ்வப்போது உங்கள் குறைகளைப் பற்றி எண்ணிப் பார்ப்பது நல்லது. அவ்வப்போது மற்றவர் குறைகளைப் பற்றி எண்ணிப் பார்ப்பதும் நல்லது. அவ்வப்போது உங்கள் பண்புகளைப் பற்றி எண்ணிப் பார்ப்பது நல்லது. அவ்வப்போது மற்றவர் பண்புகளைப் பற்றி எண்ணிப் பார்ப்பதும் நல்லது.
It is good from time to time to examine one’s own faults; it is good from time to time to examine another’s faults. It is good from time to time to examine one’s own attainments; it is good from time to time to examine another’s attainments.
A.IV,160

128. இயற்கையாகவே நீர் சமமானது, அசைவற்றது, துன்பப்படாதது, தூய்மையானது. அதைப் போலவே தியானத்தைக் கற்றுக் கொள்ளும் நேர்மையான மாணவன் தந்திரமற்றவனாக, ஏமாற்றாதவனாக, மறைமுகமாக எதையும் செய்யாதவனாக, பொய்யாக நடிக்காதவனாக, சமநோக்குடையவனாக, அசைக்க முடியாதவனாக, துன்பப் படாதவனாக, இயற்கையாகவே நல்ல தூய்மையுடையவனாக இருக்கின்றான்.
நீர் சமநிலையானது. இயற்கையாகவே குளுமையானது. அதைப் போலவே தியானத்தைக் கற்றுக் கொள்ளும் நேர்மையான மாணவன் எல்லா உயிர்வாழ்வனவிடத்திலும் கருணைகாட்ட வேண்டும், அவர்கள் நலம் நாட வேண்டும், பொறுமையும் அன்பும் இரக்கமும் நிறைந்தவராக இருக்க வேண்டும்.

மறுபடியும் தூய்மையற்றவற்றை நீர் தூய்மையாக்குவதைப்போலத் தியானத்தைக் கற்றுக் கொள்ளும் நேர்மையான மாணவன் அவர் சிற்றூரில் வாழ்ந்தாலும், காடுகளில் வாழ்ந்தாலும் எல்லாச் சூழ்நிலைகளிலும் பழிச்செயல் அற்றவராகவும் உபாத்தியாயராலோ, ஆசிரியராலோ கடிந்துரை கூற எவ்வித வாய்ப்பும் தராதவராகவும் இருக்க வேண்டும்.

மீண்டும் நீரை எல்லோரும் விரும்புவதைப் போலத் தியானத்தைக் கற்றுக் கொள்ளும் நேர்மையான மாணவன், அவருக்குக் குறைவான ஆசைகளே கொண்டிருப்பதால், திருப்தியுடன் இருப்பதால், தனித்து ஒருவராகவே தியானம் செய்வதால், உலகத்திலுள்ள அனைவருமே நிரந்தரமாக விரும்பத் தக்கவராக இருக்க வேண்டும்.

இறுதியாக நீர் எவருக்குமே துன்பம் விளைவிக்காதது போல, தியானத்தைப் பயிலும் நேர்மையான மாணவரும் எவருக்குமே தீங்கு விளைவிக்கக் கூடாது. உடலாலோ, சொல்லாலோ அல்லது எண்ணத்தாலோ மற்றவர் மத்தியில் பூசல், சண்டை, சச்சரவு, தகராறு, தியானத்தைத் தவிர்த்தல், வெறுப்பு ஆகியவற்றை உண்டாக்கக் கூடாது.

As water is balanced, unshaken, untroubled and naturally pure, even so, the earnest student of meditation, dispelling trickery, cajolery, insinuation and dissembling, should be well poised, unshaken, untroubled and quite pure by nature. As water is poised and naturally cool, even so, the earnest student of meditation, out of compassion for all beings and seeking their welfare, should be possessed of patience, love and mercy. Again, as water makes the impure pure, even so, the earnest student of meditation, whether he be in the village or the forest, should in all circumstances be one who, being without transgression, gives no reason to be reprimanded by the preceptor or teacher. And again, as water is wanted by everyone, even so, the earnest student of meditation, having few wishes, is content, aloof and solitary in meditation, and should be one who is constantly much desired by the whole world. And finally, as water troubles no one, even so, the earnest student of meditation should do no wrong by body, speech or thought that produces in others strife, quarrels, contention, disputes, neglected meditation or dislike.
Mil.383*

129. எவனொருவன், வசைமொழி, வன்செயல், தண்டனைகளுக்கு எல்லாம் கோபம் கொள்ளாது பொறுமையுடன் இருக்கிறானோ, எவனுக்குப் பொறுமையே  பலமும் பாதுகாப்புமாக  இருக்கிறதோ  அவனையே நான் அந்தணன் என அழைப்பேன்.

One who endures abuse, violence
Or punishment without resentment,
And whose power and protection is patience -
Him I call a true brahmin.
Dhp.399

130. நன்மை செய்பவனுக்கு இங்கு மகிழ்ச்சி; அங்கு (அடுத்த பிறப்பிலும்) மகிழ்ச்சி.
இங்கும் அங்கும் மகிழ்ச்சியே.
அவன் தன் சொந்த நல்வினையை நினைவு கூர்வதால்
களிப்புற்று மகிழ்ச்சியடைகிறான்.

நன்மை செய்பவனுக்கு இங்கு உவகை, அங்கு உவகை. இங்கும் அங்கும் உவகையே.
'நான் நன்மை செய்தேன்' என்னும் எண்ணம்
இன்பத்தில் அவனை நிரப்புகிறது.
பேரின்ப உலகில் நுழையும் போது
மேலும் மேலும் இன்பம் காண்கிறான்.

The doer of good rejoices here, rejoices there
Rejoices both here and there.
He rejoices and is glad
When he recollects his own good deeds.

The doer of good delights here, delights there,
Delights both here and there.
The thought: ‘I have done good’
Fills him with delight.
He delights all the more
When he goes to the realm of bliss.

Dhp.16,18

131. அளவிட முடியாப் புத்தனை நினைத்து,
நீ பிரதிபலி,
உடலையும் மகிழ்ச்சியால் நிரப்பி,
என்றும் நீ முன்னேறுவாயே.

அளவிட முடியா அறத்தினை நினைத்து,
நீ பிரதிபலி,
உடலையும் மகிழ்ச்சியால் நிரப்பி,
என்றும் நீ முன்னேறுவாயே.

அளவிட முடியாச் சங்கத்தினை நினைத்து
நீ பிரதிபலி,
உடலையும் மகிழ்ச்சியால் நிரப்பி,
என்றும் நீ முன்னேறுவாயே.

Recollect the immeasurable Buddha,
Be reflective,
And with the body filled with joy,
You will always be uplifted.

Recollect the immeasurable Dhamma,
Be reflective,
And with the body filled with joy,
You will always be uplifted.

Recollect the immeasurable Sangha,
Be reflective,
And with the body filled with joy,
You will always be uplifted.

Th.382-4*

132. நண்பர்கள் வேடத்தில் பழகும் எதிரிகள் நான்கு வகைப்படுவர்; பேராசைக்காரன், செயல் திறனற்ற பேச்சாளி, துதிபாடுபவன் (முகத்துதி செய்பவன்) மற்றும் வீண் செலவு செய்பவன்.

பேராசைக்காரன் நான்கு காரணங்களுக்காக நண்பனைப் போல் தோன்றும் எதிரியாகிறான். பேராசைப்படும் அவன் கொடுப்பது குறைவாக இருக்கும், ஆனால் கேட்பது அதிகமாக இருக்கும். அவன் செய்ய வேண்டியதைச் செய்தால் அது அச்சத்தின் காரணமாகவே இருக்கும். அவன் தன்னலத்தை மட்டுமே கருதி எவ்வேலையையும் தொடருவான்.

வாயால் பேசிச் செயலில் காட்டாதவன் நான்கு காரணங்களுக்காக நண்பனைப் போல் தோன்றும் எதிரியாகிறான். இறந்த காலத்தில் உங்களுக்காகச் செய்த நன்மையை அடிக்கடி சொல்லிக் காட்டுவான். உங்களுக்காக எதிர்காலத்தில் அவன் செய்யப் போகும் நன்மைகளைச் சொல்லிக் காண்பிப்பான். வெறும் வார்த்தைகளாலேயே அவன் உங்களைக் கவர முயற்சிப்பான். உங்களுக்கு உதவக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும் போது, தன் இயலாமையை உங்களிடம் கூறிவிடுவான்.

முகத்துதி பாடிப் புகழ்ந்துரைப்பவன் நான்கு காரணங்களுக்காக நண்பனைப் போல் தோன்றும் எதிரியாகிறான். தவறுகளைச் செய்ய உங்களை ஊக்குவிப்பான். நன்மைகள் செய்யவிடாமல் தடுப்பான். உங்கள் முன்னால் உங்களைப் புகழ்ந்துரைப்பான். உங்களுக்குப் பின்னால் உங்களை இகழ்ந்துரைப்பான்.

வீண் செலவு செய்பவன் நான்கு காரணங்களுக்காக நண்பனைப் போல் தோன்றும் எதிரியாகிறான். நீங்கள் மது அருந்தும் போது உங்களுடன் கூட்டாளியாக இருப்பான். அகால நேரங்களில் அடிக்கடி நீங்கள் தெருக்களில் சுற்றும் போது உங்களுடன் இருப்பான். கீழ்த்தரமான காட்சிகளுக்கு, நாடகங்களுக்கு நீங்கள் அடிக்கடி செல்லும் போது உங்களுடனிருப்பான். நீங்கள் சூதாட்டத்தில் ஈடுபடும் போதும் அவன் உங்களுடன் இருப்பான்.
நல்லெண்ணம் கொண்ட உள்ளத்துடன் கூடிய நான்குவித மக்களிருக்கின்றனர். அவர்களே உண்மையான நண்பர்களாகத் தெரிவர்; உதவியாளர், இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொள்பவர், சரியான அறிவுரை வழங்குபவர், இரக்கப்படுபவர்.

உதவி செய்பவர் நான்கு வகைகளில் உண்மையான நண்பராவர். நீங்கள் பாதுகாப்பற்றிருக்கும் போது அவர் பாதுகாப்பாக இருப்பர். நீங்கள் பாதுகாப்பற்றிருக்கும் போது உங்கள் சொத்துக்களை அவர் பாதுகாப்பார். நீங்கள் அச்சமுற்றிருக்கும் போது உங்களுக்கு ஆறுதல் தருவார். உங்களுக்கு ஏதாவது தேவைப்படும் நேரத்தில் அதை இரட்டிப்பாய்ச் செய்வார்.

இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொள்பவர் நான்கு காரணங்களுக்குகாக உண்மையான நண்பனாகிறார். அவர் தன் இரகசியங்களை உங்களிடம் கூறுவார். நீங்கள் கூறும் இரகசியங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பார். துன்பங்களில் உங்களைக் கைவிட மாட்டார். தன் உயிரையும் உங்களுக்காகத் தரத் தயாராக இருப்பார்.

நல்ல அறிவுரை தரும் நண்பன் நான்கு காரணங்களுக்குகாக உண்மையான நண்பனாகிறான். நீங்கள் தவறு செய்வதைத் தடுக்கிறான். நன்மைகள் செய்ய உங்களைத் தூண்டுகிறான். நீங்கள் கேள்விப்படாததைப்பற்றி உங்களிடம் கூறுவான். நீங்கள் நன்மையடைய வழிகாட்டுவான்.
உங்களுக்காக இரக்கப்படும் நண்பன் நான்கு காரணங்களுக்காக உண்மையான நண்பனாகிறான். உங்களுக்குத் தீமை விழையும் போது கவலைப் படுவான். உங்களுக்கு நன்மை நிகழும்போது மகிழ்ச்சியடைவான். உங்களைத் தாழ்வாகப் பேசுபவர்களைத் தடுப்பான். உங்களைப் புகழ்ந்து பேசுபவர்களைப் போற்றுவான்.

There are four types of people who should be known as enemies disguised as friends; the greedy person, one who speaks but does not act, the flatterer and the squanderer. The greedy person is an enemy disguised as a friend for four reasons. He is greedy, he gives little and asks for much, if he does what he should, it is only out of fear, and he pursues his own interests only. He who speaks but does not act is an enemy disguised as friend for four reasons. He reminds you of the good he did for you in the past, he talks of good he will do for you in the future, he tries to win your favour with empty words, and when the opportunity to help you arises, he pleads helplessness. The flatterer is an enemy disguised as a friend for four reasons. He encourages you to do wrong, he discourages you from doing right, he praises you to your face and speaks ill of you behind your back. The squanderer is an enemy disguised as a friend for four reasons also. He is your companion when you drink, when you frequent the streets at untimely hours, when you haunt low shows and fairs, and he is your companion when you gamble.
There are four kinds of good-hearted people who should be known as true friends; the helper, the consistent friend, one who gives good counsel, and one who sympathizes. The helper is a true friend for four reasons. He guards you when you are off your guard, he guards your property when you are off your guard, he comforts you when you are afraid, and when something has to be done, he gives you twice what you require. The consistent friend is a true friend for four reasons. He tells you his secrets, he keeps the secrets you tell him, in trouble he does not forsake you, and he would even lay down his life for you. The friend who gives good counsel is a true friend for four reasons. He discourages you from doing wrong, he encourages you to do good, he tells you things you have not heard, and he points out the way to heaven. The friend who sympathizes is a true friend for four reasons. He is sad at your misfortunes, he rejoices at your good fortune, he restrains others from speaking ill of you, and he commends those who speak well of you.
D.III,186

133. நல்ல நண்பர்களை நீங்கள் கீழ்க்காணுமாறு நினைவு கூர வேண்டும்: 'இது உண்மையிலேயே எனக்குத்தான் இலாபம். நல்ல, கருணைமிக்க, என் நலத்தை ஊக்குவித்து எனக்கு அறிவுரை கூறிக் கற்றுத்தரும் நண்பர்களைப் பெற்றிருப்பது எனக்குத்தான் நல்லது.'

You should recollect beautiful friends like this: ‘It is indeed a gain for me. Indeed, it is good for me that I have beautiful friends, compassionate, desiring my welfare, and who mentor and teach me.’
A.V,336

134. ஆதாயமும், பெயரும், புகழுமே நமக்கு உண்மையில் ஆபத்தானவை. எனக்குத் தெரிந்த ஒருவனின் மனதை நான் நன்கு அறிவேன். அவன் வெள்ளிப் பாளங்கள் நிறைந்த ஒரு தங்கப்பானைக்கு ஈடாகக்கூட வேண்டுமென்று ஒரு பொய் பேசமாட்டான்.  அதே மனிதன் வேறொரு சமயத்தில் ஆதாயத்தாலும், பெயராலும் , புகழாலும் அவன் உள்ளம் வாட்டிவதைக்கப்பட்டபோது பொய் பேசியதை நான் பார்த்தேன். உண்மையில் ஆபத்தைத் தருபவை ஆதாயமும், பெயரும், புகழுமே.

Truly dangerous are gains, honours and fame. Concerning this, I have known a person whose mind I have read, who would not deliberately tell a lie even for the sake of a golden bowl filled with pieces of silver. That same person have I seen at another time telling lies because his heart was obsessed by gains, honours and fame. Truly dangerous are gains, honours and fame.
S.II,233

135. தவறான நடத்தை கொண்ட இல்வாழ்வோனையோ துறவியையோ நான் போற்றுவதில்லை. ஒருவன் இல்வாழ்வோனோ அல்லது துறவியோ தனது தவறான நடத்தைகளால் சரியான வழியை, அறத்தை, திறமையான செயலை நிறைவேற்றாமல் போய்விடுகிறான்.
நன்னடத்தையுடையவர் யாராயிருந்தாலும் இல்வாழ்வோனாக இருந்தாலும் துறவியாக இருந்தாலும் அவர்களை நான் போற்றுவேன். ஒருவன் நன்னடத்தையின் காரணமாக, அவன் இல்வாழ்வோனாக இருந்தாலும் அல்லது துறவியாக இருந்தாலும், சரியான வழியில் செல்வான். அறத்தை, திறமையான செயலை நிறைவேற்றுவான்.

I do not praise wrong behaviour in either householder or monk. If either a householder or a monk fares along wrongly, then he is not accomplishing the perfect way, the Dhamma, the skilled, as a result of his wrong behaviour. Rather, I praise good behavior in both householder and monk. If either a householder or a monk fares along rightly, then he can win the Perfect Way, the True Dhamma, the Skillful, as a result of his right behavior.
A.I,69

136. புத்தபெருமான் ஒரு திறமைவாய்ந்த மருத்துவரைப் போன்றவர். அவர் மாசுற்ற கீழ்மை என்னும் நோயைக் குணப்படுத்தக் கூடியவர். அறம் சரியாகக் கொடுக்கப்பட்ட மருந்து போன்றதாகும். மாசுபட்ட கீழ்மை என்னும் நோய் குணப்படுத்தப்பட்ட சங்கம் (புத்தரின் சீடர்கள்) அம்மருந்தால் உடல் நலம் மீட்கப்பட்ட மக்களைப் போன்றவர்கள்.

The Buddha is like a skilled physician in that he is able to heal the sickness of the defilements. The Dhamma is like rightly applied medicines. The Sangha, with their defilements cured, are like people restored to health by that medicine.
Pmj.21*

137. தாமரையை நீர் எப்படி அழுக்காக்க முடியாதோ அதைப்போலவே நிர்வாண நிலையை எந்த மாசுகளாலும் அழுக்காக்க முடியாது. நிர்வாண நிலையில் பொதிந்து கிடக்கும் தாமரைக் குணமே இதுதான்.

குளிர்ந்த நீர் காய்ச்சலைக் குறைக்கும் ஒரு சாதனமாகும். அதைப்போல மாசுகளால் ஏற்படுத்தப்பட்ட காய்ச்சலைத் தணிக்கும் குணம், குளுமையான நிர்வாண நிலைக்கு உண்டு. மனிதர்களும் விலங்குகளும் களைப்படைந்து தாகமேற்பட்டு வெப்பத்தால் பாதிக்கப்படும்போது, நீரே தாகத்தைத் தணிக்கும் சாதனமாகும். அதைப்போலவே புலன்களால் ஏற்படும் மகிழ்ச்சிகளுக்காக ஏங்கும் ஏக்கத்தையும் மேலும் அவ்வாசை தொடர்வதையும் அகற்றக்கூடிய சாதனமே நிர்வாண நிலைதான். இவ்விரண்டு சிறப்புக் குணங்களையும் கொண்டதே நிர்வாண நிலையாகும்.
விடங்குடித்து (நஞ்சு குடித்து) வருந்துகிறவனுக்கு முறிவு மருந்து (மாற்று மருந்து) அவன் உயிரை மீட்பதுபோல, மாசுகளால் தாக்கப்பட்டு வருந்துகிறவனுக்கு நிர்வாணம் விடுதலையைக் கொடுக்கும். மேலும், ஒரு மாற்று மருந்து நோய்க்கு ஒரு முடிவு கட்டுவதைப்போல, துன்பங்களுக்கு நிர்வாணம் ஒரு முடிவு கட்டுகிறது. மாற்று மருந்து ஒரு உயிர் கொடுக்கும் தேனாகும். நிர்வாணமும் ஒரு உயிர் கொடுக்கும் தேனாகும். மாற்று மருந்திலிருக்கும் மூன்று சிறப்பு அம்சங்கள் நிர்வாண நிலையிலும் இருக்கின்றன.

உயிரினத்துக்கு வாழ்நாளில் பாதுகாப்பளிப்பது உணவே. அதைப்போலவே ஒரு நிர்வாண நிலையை நாம் சரிவர உணர்ந்தால் வாழ்க்கையில் முதுமையையும் சாவையும் விரட்டிப் பாதுகாப்பளிப்பது நிர்வாண நிலையே என உணரலாம். எல்லா உயிரினங்களுக்கும் உளஞ்சார்ந்த சக்தியை அளிப்பதும் உணவே. அதைப்போலவே நன்றாக உணர்ந்தால் நிர்வாண நிலை எல்லா உயிரினங்களிலும் சிறப்பான குணங்களை உற்பத்தி செய்யும். மேலும் எல்லா உயிரினங்களுக்கும் பசியால் வருந்தும் போது அமைதியளிப்பது உணவே. அதைப்போலவே நிர்வாண நிலையைச் சரியாக உணர்ந்தால் எல்லா உயிரினங்களிலும் மாசுகளால் ஏற்படும் துன்பத்தையொழித்து அமைதியைக் கொடுப்பது நிர்வாண நிலையே. இறுதியாக எல்லா உயிரினங்களிலும் பலவீனத்தால் ஏற்படும் களைப்பைப் போக்குவது உணவே. அதைப்போலவே சரியாக உணர்ந்தால் எல்லா உயிரினங்களிலும் துன்பத்தால் ஏற்படும் எல்லாவிதக் களைப்பையும் போக்குவது நிர்வாண நிலையே. உணவிலுள்ள இவ்வைந்து சிறப்பான குணங்களும் நிர்வாண நிலையிலுமுள.

விண்வெளி பிறக்காத ஒன்று. அதற்கு வயதோ, சாவோ கிடையாது. இங்கு நிற்பதும் இல்லை அங்கு எழுவதும் இல்லை. அதனை விவரிப்பது கடினம். திருடர்களால் அபகரிக்க முடியாது. எதுவும் அதை தாங்கி நிற்கவுமில்லை. அது பறவைகளின் ஆட்சி மண்டலம். அவற்றிற்குத் தடைகளோ முடிவோ கிடையாது. அதைப்போலவே நிர்வாணம் பிறக்காத ஒன்று. அதற்கு வயதோ, மரணமோ கிடையாது. இங்கு நிற்பதும் இல்லை அங்கு எழுவதும் இல்லை. அதனை விவரிப்பது கடினம். அதைத் திருடர்களால் திருடவும் முடியாது. அதனை எதுவும் தாங்கி நிற்கவுமில்லை. அது அறிஞர்கள், மேன்மக்களின் ஆட்சி மண்டலம். அதற்குத் தடையோ முடிவோ கிடையாது. இந்தப் பதினொறு குணங்களே நிர்வாண நிலையிலிருக்கும் விண்வெளியின் குணங்களாம்.

ஆசைகளைத் தீர்த்து வைக்கும் இரத்தினக் கல்லைப் போல நிர்வாண நிலையும் ஆசைகளைத் தீர்த்து வைக்கும் சாதனமாகும். இரத்தினக்கல் மகிழ்ச்சியைத் தருவது போல நிர்வாணமும் மகிழ்ச்சியைத் தருகிறது. இரத்தினக்கல் பளபளவென மின்னுவதைப்போல நிர்வாண நிலையும் பளபளவென மின்னும். இந்த மூன்று சிறப்பான குணங்களே நிர்வாணத்தில் பொதித்து கிடக்கும் விலையுயர்ந்த இரத்தினக்கற்களின் குணங்களாம்.
சிவப்பு நிறமுள்ள சந்தனக்கட்டைகள் கிடைப்பதற்கு அரியவாம். அதைப்போல நிர்வாணமும் கிடைப்பதற்கு அரியதே. சிவப்புச் சந்தனக்கட்டையின் மணத்தை வேறு சமமான மணத்துடன் ஒப்பிட முடியாது. அதைப் போலவே நிர்வாண நிலையைத் தரும் அரிய மணத்திற்கும் ஈடான ஒன்று கிடையாது. இருந்தாலும் நல்லவர் சிவப்புச் சந்தனத்தைப் போற்றுவர். அதைப்போலவே நிர்வாணத்தையும் மேன்மக்கள் போற்றுவர். இவையே நிர்வாண நிலையில் பொதிந்து கிடக்கும் சிவப்புச் சந்தனக் கட்டைகளின் குணங்களாம்.

As a lotus is unsoiled by water, even so, Nirvana is unsoiled by defilements. This is the one special quality of a lotus that is present in Nirvana.
As cool water is a means of allaying fever, even so, Nirvana, which is cool, is the means of allaying the fever of all the defilements. Again, as water is a means of quenching the thirst of men and beasts when they are exhausted, frightened, thirsty and overcome by heat, even so is Nirvana a means of dispelling the craving for sense pleasures and the craving for more and continued becoming. These are the two special qualities of water that are present in Nirvana.
As an antidote is the salvation of beings who are afflicted by poison, even so, Nirvana is the salvation of beings who are afflicted by the defilements. Again, an antidote puts an end to disease; even so, Nirvana puts an end to all sorrows. And again, an antidote is life-giving nectar; even so, Nirvana is life-giving nectar. These are three special qualities of an antidote that are present in Nirvana.
As food is the sustainer of the lifespan of all beings, even so, Nirvana, when it is realized, is the sustainer of the lifespan by driving out old age and dying. Again, food is the giver of strength, of the psychic powers in all beings; it is producer of beauty in all beings. Even so, Nirvana, when realized, is the producer of special qualities in all beings. And again, food is the calmer of distress in all beings; even so, Nirvana, when realized, is the calmer of the distress of the defilements in all beings. And finally, food is the remover of the weakness of exhaustion in all beings; even so, Nirvana, when realized, is the remover of all the weakness of exhaustion in all beings due to sorrows. These are the five special qualities of food that are present in Nirvana.
As space is not born, does not age or die, does not cease here or arise there, is hard to define, cannot be stolen by thieves, is supported by nothing, is the realm of birds, without obstruction and unending - even so, Nirvana is not born, does not age or die, does not cease here or arise there, is hard to define, cannot be stolen by thieves, is supported by nothing, is the realm of the Noble Ones, without obstruction and unending. These are the eleven special qualities of space that are present in Nirvana.
As a precious gem is the granter of desires, even so is Nirvana the granter of desires. As a precious gem gives delight, even so does Nirvana gives delight. As a precious gem is rich in lustre, even so is Nirvana. These are the three special qualities of a precious gem that are present in Nirvana.
As red sandalwood is hard to obtain, even so, Nirvana is hard to obtain. Again, red sandalwood is unequalled for its lovely perfume; even so is Nirvana unequalled for its lovely perfume. Yet again, red sandalwood is praised by good men; even so is Nirvana praised by the Noble Ones. These are the three special qualities of red sandalwood that are present in Nirvana.
Mil.318*

138. அண்ணல் கூறினார்: "ஒரு பெட்டைக்கோழி எட்டு, பத்து அல்லது பன்னிரெண்டு முட்டைகளின் மீது சரியாக அமர்ந்து, வெப்பத்தைக் கொடுத்து, அடை காத்துக் குஞ்சு பொரிக்க வைக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். முதன் முதலாக முட்டையைத் தன் நகங்களாலும் மூக்காலும் உடைத்துக் கொண்டு பாதுகாப்பாக வெளியே வருவது மூத்த குஞ்சா அல்லது கடைக் குஞ்சா? "
"அண்ணலே, முதலில் வெளியே வந்ததால் அதுதான் தலைக் குஞ்சு ஆகும்."
"அதைப்போலவே தான், அறியாமை என்ற ஓட்டினை, அறியாமையென்ற முட்டையில் பிறந்து மூடப்பட்டு, அறியாமையுடன் வாழும் மற்றவர்க்காக, துளைத்துக் கொண்டு வெளியே வந்தவன் நான். உலகில் முதலாவதாக, முழுமையாக பேரறிவைப் பெற்றவன். நான் தான் முதல்வன், உலகிலேயே உயர்ந்தவன்."

The Lord said: “It is like a mother hen with eight, ten or a dozen eggs which she has sat on properly, warmed properly and hatched properly. Is the chick which first pierces through the shell with claw and beak to safely emerge called the eldest chick or the youngest?”
“Being the first, Lord, it is called the eldest.”
“Even so, having pierced through the shell of ignorance for the sake of beings living in ignorance, egg born and enclosed, I am the first in the world, utterly enlightened with the unsurpassed enlightenment. I am the eldest, the highest in the world.”
Vin.III.3

139. ஒழுக்கமான ஒருவர் ஒழுக்கத்தைக் கைக்கொண்டவர் உயிரினங்களிடையே பரவியிருக்கும் மாசு என்னும் நஞ்சை முறிக்கும் மாற்று மருந்தைப் போன்றவர், அவர் உயிரினங்களிடையே இருக்கும் மாசு என்னும் நோயைக் குணப்படுத்திச் சாந்தப் படுத்தும் வலி நிவாரணியைப் போன்றவர், அவர் உயிரினங்கள் விரும்பும் பொருள்களை அளிக்கும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப் போன்றவர், நான்கு வெள்ளங்களைக் கடக்கும் ஒரு கப்பலைப் போன்றவர், பிறப்பு என்னும் பாலைவனத்தைக் கடப்பதில் அவர் பாலைவனத்தைக் கடக்கும் வணிகர் கூட்டத்தின் தலைவனைப் போன்றவர், உயிரினங்களின் பயங்கரமான மூன்று நெருப்புகளை அணைப்பதில் அவர் காற்றைப் போன்றவர், அவர் உயிரினங்களின் உள்ளத்தில் நல்ல எண்ணங்களை நிரப்புவதில் மிகப் பெரிய மழை மேகத்தைப் போன்றவர், திறமையான துறைகளில் உயிரினங்களைப் பயிற்றுவிப்பதில் அவர் ஆசிரியரைப் போன்றவர், உயிரினங்களுக்குப் பாதுகாப்பான வழிகளைக் காட்டுவதில் அவர் ஒரு வழிகாட்டி.

One who is virtuous, possessed of virtue, is like an antidote for destroying the poison of defilements in beings, is like a healing balm for allaying the sickness of defilements in beings, is like precious gems for granting all beings their wishes, he is like a ship for beings to go beyond the four floods. He or she is like a caravan leader for taking beings across the desert of repeated births, like the wind for extinguishing the three fierce fires in beings, like a great rain cloud for filling beings with good thoughts, like a teacher for encouraging beings to train themselves in what is skilled, like a good guide for pointing out to beings the path to security.
Mil.195*

140. வச்சகோத்தன் ஒருமுறை அண்ணலிடம்: "அண்ணலே, கொடை உங்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டுமென்றும், மற்றவர்களுக்குக் கொடுக்கக் கூடாதென்றும், உங்களைப் பின்பற்றுவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டுமென்றும் மற்ற ஆசிரியர்களைப் பின்பற்றுபவர்களுக்குக் கொடுக்கக் கூடாதென்றும் கேள்விப்பட்டேன். உங்கள் கருத்தைச் சிறிதும் திரித்துக் கூறாது அவர்கள் அப்படியே கூறுகின்றனரா? உங்கள் போதனையின் படி பேசுகின்றனரா? நல்ல கௌதமரே, நான் உங்களைத் தவறாகப் பிரதி பலிக்கக் கூடாது என்பதில் ஆவலாக இருக்கிறேன்."

"வச்சா. இப்படிக் கூறுவது என் கருத்தன்று. அவர்கள் வாய்மையற்றதைக் கூறி என்னைத் தவறாகப் பிரதி பலிக்கின்றனர். உண்மையிலேயே கொடை கொடுப்பதைத் தடுப்பவர் மூன்று வழிகளில் கொடை கொடுப்பவருக்குத் தீமை- தடங்கல் புரிகின்றனர். அம்மூன்றும் எவை? கொடுப்பவர்க்கு கிடைக்கும் நன்மையைத் தடுகின்றனர். பெறுபவர்க்குக் கொடை கிடைப்பதைத் தடுக்கின்றனர். அவர்களது இழிகுணத்தால் தங்களை ஏற்கனவே கெடுத்துக் கொண்டுள்ளனர்." என்று அண்ணல் பதில் கூறினார்.

Vacchagotta said to the Lord: “I have heard it said that you, good Gotama, teach that charity should only be given to you, not to others, to your followers, not to the followers of other teachers. Are those who say this representing your opinion without distorting it? Do they speak according to your teaching? For indeed, good Gotama, I am anxious not to misrepresent you.”

The Lord replied: “Vaccha, those who say this are not of my opinion, they misrepresent me and say what is not true. Truly, whoever discourages another from giving charity hinders them in three ways. What three? He hinders the giver from acquiring good, he hinders the receiver from receiving the charity, and he has already ruined himself through his meanness.”
A.I,161

141. குயவன் களிமண்ணைப் பிசைவதுபோல உங்களை நடத்த மாட்டேன். திரும்பத் திரும்பக் கட்டுப்படுத்திப் பேசுவேன். அடிக்கடி அறிவுரை கூறுவேன். உள்ளத்தில் உறுதி உள்ளவர் சோதனையில் நிலையாக நிற்பர்.

I will not treat you the way a potter treats wet clay. Repeatedly restraining I will speak to you, repeatedly admonishing. The strong heart will stand the test.
M.III,118

142. போற்றுதற்குரிய நாகசேன அடிகளை அரசன் கேட்டான்: "எது சிறந்தது? நன்மையா, தீமையா?"
"நன்மையே சிறந்தது ஐயா. தீமையோ மிகச் சிறியது."
"எவ்விதத்தில்?"
"ஐயா, எவரேனும் தவறாக நடந்துவிட்டால், தீமை செய்து விட்டால், அது வருத்தப்படக்கூடியது. 'நான் ஒரு தீய செயலைச் செய்து விட்டேன்,' என்பான். அத்துடன் தீச்செயல் வளராது. ஆனால் எவரேனும் நன்மை செய்தால் அது வருந்தக்கூடியதல்ல. வருத்தத்திலிருந்து விடுதலை கிடைத்ததால் மகிழ்ச்சி எழுகிறது. மகிழ்ச்சியிலிருந்து உற்சாகம் பிறக்கிறது. உற்சாகத்தால் மன அமைதி ஏற்படுகிறது. அமைதியாக இருப்பதால் ஒருவரின் உடல் மகிழ்ச்சியில் திளைக்கிறது. மகிழ்ச்சியிலிருந்து ஒருவரின் மனம் ஒருநிலைப்படுத்தப் படுகிறது. மனதை ஒருநிலைப்படுத்திய ஒருவர், ஒவ்வொரு பொருளையும் உண்மையான தோற்றத்தில் காண்கிறார். இப்படியே நன்மை வளர்கிறது."

The king asked Venerable Nagasena: “Which is greater, good or bad?”
“Good is greater, Sir; bad is only small.”
“In what way?”
“Sir, someone acting badly is remorseful, saying: ‘An evil deed was done by me,’ and thus evil does not increase. But someone doing good is not remorseful. Because of freedom from remorse, gladness arises, from gladness comes joy, because of joy the body is tranquil, with a tranquil body one is happy, and the mind of one who is happy becomes concentrated. One who is concentrated sees things as they really are, and in this way good increases.”
Mil.84*

143. அண்ணல் ஒருமுறை வைசாலியில் பெருங்காட்டில் இருபுறத்திலும் முக்கோணச் சுவருடைய மண்டபத்தில் அமர்ந்திருந்தார். அப்பொழுது காரணபாலின் என்னும் அந்தணன் இலிச்சலிகளுக்காக (ஒரு நாட்டு மக்கள்) ஒரு கட்டடத்தைக் கட்டியிருந்தான். காரணபாலின் தூரத்தில் பிங்கியானின் என்னும் மற்றொரு அந்தணன் வருவதைக்கண்டு அவனை நெருங்கி, 'வணக்கம் ஐயா, மேதகு தாங்கள் இவ்வளவு காலையில் எங்கிருந்து வருகிறீர்கள்?' என்று கேட்டான்.

"நான் துறவி கௌதமரிடமிருந்து வருகிறேன்."

"நன்று, தாங்கள் கௌதம முனிவரின் தெளிவான அறிவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர் அறிவாளிதானா?"

"நான் எப்படி அவரை என்னுடன் ஒப்பிட முடியும். அவருடை தெளிவான அறிவை மதிப்பிட நான் யார்? அவரைப் போன்ற மற்றொரு துறவிதான் அவரது தெளிந்த அறிவை மதிப்பிட முடியும்."

"தாங்கள் உண்மையிலேயே கௌதம முனிவரை உயர்வாகவே புகழ்கிறீர்கள்."

"அவருடன் என்னை ஒப்பிடக் கூட முடியாது. கௌதமமுனிவரைப் புகழ நான் யார்? உண்மையிலேயே போற்றப்பட்டவர்களால் போற்றப்பட்டவர் கௌதம முனிவர்தான். மனிதர்கள் மற்றும் தேவர்களிடையே மிக உயர்வானவர் அவர் தான்."

"அவர் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறீர்களே. அப்படி என்னதான் நன்மையை அவரிடம் கண்டீர்கள்?"

"எப்படி ஒருவன் நறுமணச் சுவையுடைய உணவையுண்டு திருப்தியடைகிறானோ அதைப் போலவே சிறந்த கௌதமரின் போதனைகளை, அறத்தை அதன் எல்லாப் பகுதிகளையும் கேட்டவன், மற்றவரின் உரைக்கு ஏங்கமாட்டான். கூட்டத்திற்குச் செல்ல மாட்டான். மற்ற துறவிகளையோ அந்தணர்களையோ நாடமாட்டான். ஒருவன் பசியால் வாடி, பலவீனமாயிருக்கும் போது அவனுக்குத் தேன் கலந்த மாவடை கிடைத்தால், அதனைச் சுவைக்கும் போதெல்லாம் அதன் இனிமையை, நறுமணத்தை அனுபவிப்பான். அதைப்போலவே ஒருவன் நற்கௌதமரின் அறத்தை, அதன் எல்லாப் பகுதிகளையும் கேட்பவன், இனிமையையும் மன அமைதியையும் அனுபவிப்பான். ஒருவனுக்கு மஞ்சல் நிறத்திலோ அல்லது சிவப்பு நிறத்திலோ ஒரு சந்தனக்குச்சி/தடி கிடைத்தால், அதன் அடிப்பாகத்தை, நடுப்பாகத்தை அல்லது மேற்பாகத்தை அவன் நுகரும் போதெல்லாம் மிகச்சிறந்த நல்ல மணத்தையே அனுபவிப்பான். அதைப்போலவே நற்கௌதமரின் அறத்தின் எல்லாப் பாகத்தையும் ஒருவன் கேட்டால் அவனுடைய துன்பம், துயரம், வருத்தம், புலம்பல், இழந்த மனத் திடம் ஆகியவை திடீரென மறைந்து விடும். ஒருவன் வெப்பத்தால் அலைக்கழிக்கப் பட்டு வெப்பம் பரவிக் களைப்புற்றுத் தாகத்தால் தண்ணீருக்கு ஏங்கும்போது தெளிந்த இன்சுவையுடைய, குளிர்ந்த கண்ணாடி போன்ற நீர் நிறைந்த குளத்தைக் கண்டால், அருகில் களைப்பாற நல்ல இடமும் கிடைத்தால், அக்குளத்தில் அவன் மூழ்கி, குளித்து, குடித்து எல்லாத் துன்பங்களையும், சோர்வையும், கவலைகளையும் தணித்துக் கொள்வான். அதைப்போலவே நற்கௌதமரின் அறத்தின் எல்லாப் பகுதிகளையும் கேட்டறிந்தவர்கள் தங்கள் எல்லாத் துன்பங்களையும், சோர்வையும், கவலைகளையும் முழுமையாகத் தணித்துக் கொள்வர்."

இதை அவன் கூறியவுடன், அந்தணன் காரணபாலின் தன் இருக்கையிலிருந்து எழுந்து தன் மேலாடையைச் சரி செய்து கொண்டு முழங்காலிட்டுக் கைகளை விரித்து அண்ணல் இருக்கும் திசை நோக்கி மூன்று முறை இவ்வாறு கூறினான்: "அண்ணலை, அந்தப் போற்றுதற்குரிய நற்பண்பு சார்ந்தவரை முழுமையான பேரறிவு படைத்த புத்தபெருமானை வணங்குகிறேன். அருமை, பிங்கியானின், உண்மையிலேயே அருமை. கவிழ்ந்து கிடந்த ஒன்றை ஒருவன் நிலைநிறுத்தியதைப் போல, மறைந்திருந்த ஒன்றைக் கண்டு பிடித்ததைப்போல, குருடனுக்கு வழிகாட்டியதைப் போல, இருளில் விளக்கைக் கொண்டுவந்து கண்ணுடையோரைக் காண வைத்ததைப்போல இவ்வறத்திற்குப் பல வகைகளில் நீ ஒளியூட்டினாய். நானும் அந்த நல்ல கௌதமரிடம், அறத்திடம், சங்கத்திடம் சரணடைவேன். என்னை ஒரு புது இல்லற மாணவனாகப் பார். இப்பொழுது முதல் உயிர் உள்ளவரை இவ்வறத்தைக் கடைப்பிடிப்பேன்."

Once, the Lord was staying near Vesali, at the Gabled Hall in the great forest. And at that time, the brahmin Karanapalin constructed a building for the Licchavis. And Karanapalin saw the brahmin Pingiyanin coming in the distance, and as he approached, he said: “Pray, now, from where comes your honour Pingiyanin so early in the day?”
“I come from the presence of the monk Gotama.”
“Well, what do you think of his clarity of wisdom? Do you think he is a wise man?”
“But what am I compared to him? Who am I to judge his clarity? Is it not only one like him who could judge the monk Gotama’s clarity of wisdom?”
“High indeed is the praise that you give the monk Gotama.”
“But what am I compared to him? Who am I to praise the monk Gotama? Truly he is praised by the praised. He is the highest amongst gods and humans.”
“But what good do you see in him that you have such faith in him?”
“Just as when a man is completely satisfied with some delicious flavour, and longs not for other flavours that are poor - even so, when one hears the good Gotama’s Dhamma in all its parts, one longs not for the talk of others, the crowd, other recluses or Brahmins. Just as a man overcome by hunger and weakness may come across a honey cake, and whenever he tastes it, he enjoys the sweet, delicious flavour - even so, when one hears the good Gotama’s Dhamma in all its parts, one experiences sweetness and serenity of mind. Just as a man may come across a stick of yellow or red sandalwood, and wherever he smells it, at the root, in the middle or at the top, he comes across an exceedingly fair, delicious fragrance - even so, when one hears the good Gotama’s Dhamma in all its parts, all grief, sorrow, suffering, lamentation and despair just vanish away. Just as a man tortured by heat, overcome by heat, wearied, craving and thirsty, might come to a pool of clear, sweet, cool, limpid water, a lovely resting place, and might plunge in, bathe, drink, and allay all woe, fatigue and fretting - even so, when one hears the good Gotama’s Dhamma in all its parts, all woe, fatigue and fretting is wholly allayed.”
When he had said this, the Brahmin Karanapalin arose from his seat, arranged his upper robe on his shoulder, set his right knee on the ground and bending forth his outstretched hands towards where the Lord was, said three times: “Homage to the Lord, the Noble One, the fully enlightened Buddha. Wonderful is it, Pingiyanin, truly wonderful. Just as if one had set upright a thing toppled over, revealed something covered, showed a blind man the way, brought a lamp into the dark so that those with eyes could see - in the same way, you have illuminated this Dhamma in many a way. I too will go to the good Gotama, the Dhamma and the Sangha as my refuge. Look upon me as a lay disciple gone for refuge from now until as long as life lasts.”
A.III,237*

144. ஒன்றிருக்கிறது, அதனைப் பழக்கப்படுத்திக் கொண்டால், வளர்த்துக் கொண்டால், விட்டு விடுவதற்கு, துறப்பதற்கு, மோன அமைதிக்கு, நிம்மதிக்கு, உயர்ந்த அறிவிற்கு, எழுச்சிக்கு, நிர்வாணம் அடைவதற்கு உதவும். அந்த ஒன்று எது? அதுதான் அமைதியை மட்டுமே திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்தல்.

There is one thing which, if practiced and developed conduces to letting go, giving up, stilling, calming, higher knowledge, awakening and to Nirvana. And what is that one thing? It is the recollection of peace.
A.I,30

145. சங்காரவா என்னும் அந்தணன் அண்ணலை நோக்கி: "நல்ல கௌதமரே, அந்தணர்களாகிய நாங்கள் யாகங்கள் (உயிர் பலியுடன்) நடத்துகிறோம். மற்றவர்களையும் யாகங்கள் நடத்த ஊக்குவிக்கிறோம். எவரெவர் இதனைச் செய்கின்றனரோ அது மற்றவர்களுக்கும் பெரும் நன்மைகளை அளிக்கிறது. ஆனால் வீட்டில் வாழ்பவன் வீட்டைவிட்டு வெளியே சென்று, துறவற வாழ்க்கை வாழ்ந்தால் அவனுக்கு மட்டுமே நிம்மதி கிடைக்கிறது. அவ்வாழ்க்கை அவனை மட்டுமே நிர்வாண நிலைக்கு அழைத்துச் செல்கிறது. அப்படிப்பட்டவர்கள் அவர்களுக்கு மட்டும் நன்மையளிக்கக் கூடியதை மட்டுமே கடைப்பிடிக்கிறார்கள் என்று நான் கூறுகிறேன்."


அண்ணல் கூறினார்: "சரி அந்தணா. நான் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன். தகுதியான பதிலைக் கூறு. ஒரு ததாகதர் உலகில் பிறக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். பண்பு நிறைந்தவர். முழு அறிவு பெற்ற புத்தர். நல்லறிவுடனும் நன்னடத்தையுடனும் உலக அறிவை அடைந்தவர். உலகை நன்கறிந்தவர். வழிகாட்டி விஞ்சாது மனிதர்களைப் பழக்கக் கூடியவர். மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் ஆசிரியர். ஒரு புத்தர். அந்த அண்ணல் கூறுகிறார். 'வாருங்கள்! புரிந்து கொள்ளும் என் சொந்த அறிவால் நான் பெரு மகிழ்ச்சியடைந்திருக்கிறேன். இந்தக் கடைப்பிடிப்பால், இந்த வழியால் எனக்கு அம்மகிழ்ச்சி கிட்டியது. நீங்களும் வாருங்கள்! புரிந்து கொள்ளும் உங்கள் சொந்தச் சக்தியால், இந்தக் கடைப்பிடிப்பால், அதன் விளைவால் நீங்களும் பெரு மகிழ்ச்சியடையலாம்.' இப்படி இந்த ஆசிரியர் ஆயிரக்கணக்கானோருக்கு, இலட்சக்கணக்கானோருக்கு அறத்தைப் போதிக்கிறார். ஆக அந்தணா, இது இப்படி இருக்க, வீட்டைத் துறந்து சென்றவரின் கடைப்பிடிப்பு அவருக்கு மட்டும் நன்மையைக் கொடுக்குமா அல்லது பலருக்கும் நன்மை கொடுக்குமா?"

"நல்ல கௌதமரே. இப்பழக்கம் அதிக மக்களுக்கே நன்மை விளைவிக்கும்."

The brahmin Sangarava said to the Lord: “Good Gotama, we brahmins perform the sacrifice and encourage others to do so. Whoever does this creates much good that benefits many people. But one who goes forth from home into homeless life as a monk only benefits himself, only calms himself, leads only himself to Nirvana. I say that such a person is practicing something that benefits only himself.”
And the Lord said: “Well, brahmin, I will ask you a question, answer as you think fit. Let us say a Tathagata arises in the world, a Noble One, a fully enlightened Buddha, with perfect knowledge and conduct, happily attained, a knower of the worlds, a guide unsurpassed for people to be tamed, a teacher of gods and humans, a Buddha, the Lord. And then he says: ‘Come! By my own power of realization I have attained great happiness as a result of this practice, this way. You practice it too! By your own powers of realization you too will attain great happiness as a result of this practice, this way.’ Thus this teacher teaches Dhamma to many hundreds, many thousands, many hundreds of thousands of such people. Now brahmin, since this is so, is this going forth into the homeless life as a monk a practice that benefits only one person or many people?”
“Good Gotama, it is a practice that benefits many people.”
A.I,168

146. தேவனொருவன் அண்ணலிடம் கூறினார்: "இந்த ஆறும் ஒருவனை அழிவுக்கு கொண்டு செல்லாது, எந்த ஆறு? ஆசிரியருக்கு, அறத்திற்கு, சங்கத்திற்கு, பயிற்சிக்கு, நேர்மைக்கு மற்றும் அன்புக்கு ஆகிய ஆறுக்கும்  நாம் அளிக்கும் மரியாதை ஒருவனை அழிவுக்கு கொண்டு செல்லாது."

பின்பு அன்ணல் துறவிகளுக்கு தேவன் கூறியவற்றுடன்

"ஆழ்ந்த மரியாதை ஆசிரியருக்கும்
அறத்திற்கும் சங்கத்திற்கும்
அன்போடும், நேர்மையோடும் அளிப்பவன்,
அறவணடியவன், தோல்வியே காணான்;
நிர்வாண நிலையை அவன் நெருங்கி நிற்கிறான்." எனக் கூறினார்.

A god said to the Lord: “These six things do not lead to one’s decline. What six? Reverence for the Teacher, the Dhamma, the Sangha, for the training, for earnestness and for love.” Later, the Lord repeated to the monks what the god had said, and then added:
“Deep reverence for the Teacher,
The Dhamma and the Sangha.
With earnestness and love,
One like this will not fail;
For they are near Nirvana.”

A.III,330
147. நோயால் துன்புறும் ஒருவன்
மருத்துவன் அருகிலிருந்தும்
மருத்துவனை நாடாவிட்டால்,
அது மருத்துவரின் குறை அன்று.

அதைப்போலவே, ஒருவன் வதைபட்டு
மாசு என்னும் நோயால் அழுத்தப்பட்டும்
ஆசிரியரிடம் உதவி கோரவில்லையென்றால்,
அது ஆசிரியரின் குறை அன்று.

If a person suffering from a disease
Does not seek treatment
Even when a physician is available,
That is not the fault of the physician.

In the same way, if one is oppressed
And tormented by the disease of the defilements
But does not seek help from the Teacher,
That is not the Teacher's fault.
Ja.I,5*

148. அமைதியான நற்கௌதமர் இருப்பது அதிசயமானது. உண்மையிலேயே அற்புதமானது. அவருடைய நிறம் எவ்வளவு தெளிவாக ஒளி வீசுகிறது! இலையுதிர் காலத்து மஞ்சள் வண்ண இலந்தைப் பழம் எப்படி ஒளி வீசுமோ அதைப்போல, நார்களை நீக்கிய நுங்கு எப்படி ஒளிவீசுமோ அதைப்போல நற்கௌதமரின் உடலும் ஒளிவீசுகிறது. ஒரு பொற்கொல்லனின் புடத்தில் திறமை வாய்ந்த ஒரு பொற்கொல்லனால் உருவாக்கப் பட்ட ஒரு தங்கச் சிலம்பு ஒரு மஞ்சள் துணி மீது வைக்கப் பட்டிருந்தால் எப்படி மின்னுமோ, ஒளி வீசுமோ, அதைப் போலவே நற்கௌதமரின் புலன்கள் அமைதியானவை. அவருடைய நிறம் தெளிவான ஒளி வீசுகின்ற ஒன்று.

It is wonderful, truly marvelous, how serene the good Gotama’s presence is, how clear and radiant his complexion. Just as a yellow jujube fruit in autumn is clear and radiant, just as a palm tree fruit separated from the stalk is clear and radiant, so too is the good Gotama’s complexion. Just as a trinket of red gold, wrought in a crucible by a clever goldsmith, deftly beaten and laid on a yellow cloth shines and glitters - so too the good Gotama’s senses are calmed and his complexion is clear and radiant.
A.I,181*

149. ஒரு கலங்கிய, கலக்கப்பட்ட சேறு நிரம்பிய குளத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு மனிதன் அதன் கரை மீது நிற்கிறான். அவனால் குளத்தின் அடியில் கிடக்கும் சிப்பிகள், கிளிஞ்சல்கள், கூழாங்கற்கள், சரளைக்கற்கள், அங்கும் இங்கும் நீந்தித் திரியும் மீன்கள் முதலியவற்றைப் பார்க்க முடியாது. ஏன்? நீர் கலங்கிய நிலையில் அவற்றைப் பார்க்க முடியாது. அதைப்போலவே கலங்கிய உள்ளத்தோடு இருப்பவன் தன்னலத்தையும் விளங்கிக் கொள்ள முடியாது, பிறர் நலத்தையும் விளங்கிக் கொள்ள இயலாது. ஏன்? அவனுடைய உள்ளம்கலங்கிய நிலையில் இருப்பதால்.

இப்பொழுது தெளிவான கலங்காத தூய்மையான நீர் நிறைந்த ஒரு குளத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். பார்வையுடைய ஒருவன் அந்தக் குளக்கரை மீது நின்று அந்தக் குளத்தின் அடியில் கிடக்கும் சிப்பிகள், கிளிஞ்சல்கள், கூழாங்கற்கள், சரளைக்கற்கள், அங்கும் இங்கும் நீந்தித் திரியும் மீன்கள் முதலியவற்றைப் பார்க்க முடியும். ஏன்? ஏனென்றால் அந்த நீரின் தெளிவான நிலைதான். அதைப்போலவே ஒருவர் தெளிவான உள்ளத்தோடு இருந்தால், தன்னலனையும் அறிந்து கொள்ளலாம், பிறர் நலனையும் அறிந்து கொள்ளலாம். மேலும், உயர்ந்த நிலைகளையும் உணரலாம். ஏன்? ஏனென்றால் கலக்கமற்ற தூய்மையான மனநிலை இருப்பதால்.

Imagine a pool of turbid, stirred up and muddied water. Then, a man with good vision might stand upon the bank. He could not see the mussels, shells, pebbles and gravel on the bottom or the fish moving about. And why? Because of the turbid state of the water. In the same way, it is impossible for one with a turbid mind to understand either his own benefit or the benefit of others, or to realize higher states. And why? Because of the turbid state of the mind. Now, imagine a pool of clear, tranquil and still water. A man with good vision might stand on the bank. He could see the mussels, shells, pebbles and gravel on the bottom, and the fish that move about. And why? Because of the untroubled state of the water. In the same way, it is possible for one with a tranquil mind to understand his own benefit and the benefit of others, and to realize higher states. And why? Because of the untroubled state of his mind.
A.I,9

150. எவர்மீது நீ இரக்கப்படுகிறாயோ, யாருடன் நீ தொடர்பு கொண்டிருக்கிறாயோ - நண்பர்கள், நெருங்கியவர்கள், பங்காளி, உறவினர் - முதலியோருக்கு சோதாபன்னா என்ற நிலையை அடையத் தேவையான நான்கு காரணிகளைப்பற்றிச் சொல்லிவிட வேண்டும். மேலும் அவற்றில் நன்கு பயிற்சி செய்ய வேண்டும். எந்த நான்கு? புத்த பெருமானிடம் நம்பிக்கை, அறத்தில் நம்பிக்கை, சங்கத்தில் நம்பிக்கை, பண்பு சார்ந்த நல்லோர் தம் மனத்தை ஒரு நிலைபடுத்த உதவும் ஒழுக்கம்.

சோதாபன்னா நிலை: ஒரு சில மாசுகளை விலக்கியவர்கள் இந்த நிலையை அடைந்தவர்கள். அதிகபட்சம் ஏழு பிறப்புகளில் நிர்வாண நிலை அடைந்து விடுவர். ஆற்றோடு "செல்பவர்" கடலில் சேர்வது உறுதி. அதைப்போல சோதாபன்னா நிலையை அடைந்தவர் நிர்வாண நிலை அடைவதும் உறுதி.

Those for whom you have sympathy, those with whom you communicate - your friends, intimates, kinsmen and relations - all should be told about, grounded in, established in the Four Limbs of Stream-Winning. What are these four? Faith in the Buddha, faith in the Dhamma, faith in the Sangha, and virtue that is dear to the Noble Ones and conducive to concentration of mind.
S.V,364

151. அப்பொழுது அந்தணன் சுந்தரீக பரத்துவாசர் அன்ணலின் அருகில் அமர்ந்திருந்தார். அண்ணலைப் பார்த்து: "நற்கௌதமர் பாகுகா ஆற்றில் குளிப்பதற்குச் செல்வதுண்டா?" எனக் கேட்டார்.

"பாகுகா ஆற்றில் என்ன இருக்கிறது? பாகுகா ஆறு என்ன மதிப்புடையது?"

"நற்கௌதமரே, பலர் பாகுகா ஆறு அவர்களைத் தூய்மைப் படுத்துமென நம்புகின்றனர். அவர்களது தீச் செயல்களை அதிலே கழுவிக் களைந்து விடுகின்றனர்."

அதற்கு அண்ணல் கூறினார்:
"பாகுகாவிலோ அதிகக்காவிலோ,
கயாவிலோ சுந்தரிக்காவிலோ,
சரசட்டியிலோ பயகாவிலோ
அல்லது பாகுமதி யாற்றிலோ,
அந்த முட்டாள் இடையறாது நுழைந்தாலும் அவன் தீச்செயல்களைக் கழுவ முடியாது.

இவ்வாறுகளால் என்ன செய்ய முடியும்?
தீயவனை அவை தூய்மைப்படுத்த முடியாது
அல்லது தீமைசெய்ய விரும்புபவனையும் திருத்த முடியாது.
நல்லவனுக்கோ ஒவ்வொருநாளும் சிறப்பான நாளே.
நல்லவனுக்கு ஒவ்வொருநாளும் புனிதமானதே.

நல்லவர் தினமும் நற்பயிற்சிகள் செய்வர்.
அதிலே குளித்து எல்லா உயிரினங்களையும் பாதுகாக்களாம்.

பொய் பேசாதே, தீமை செய்யாதே
திருடாதே, நம்பு, ஈகைக் குணத்துடன் வாழ்,
காயாவுக்குப் போவதால் என்ன நன்மை?
உங்கள் வீட்டிலிருக்கும் கிணற்றுத் தண்ணீரும் கயா ஆற்றுத் தண்ணீரும் ஒன்றுதான்.

At that time, the brahmin Sundarika Bharadvaja was sitting not far from the Lord and he said: “Does the good Gotama bathe in the Bahuka River?”
“What is there in the Bahuka River? Of what value is this river?”
“Good Gotama, many people believe that they can be purified by bathing in the Bahuka River. They wash away their evil deeds in it.”
Then the Lord said:
“In the Bahuka and at Adhikakka,
At Gaya and in the Sundarika,
In the Sarassati and at Payaga
Or in the Bahumati River,
The fool, though entering constantly,
Cannot wash away his evil deeds.

What can these rivers do?
They cannot purify the bad person
Or one who is intent on evil.
For the good person, every day is special.
For the good person, every day is holy.

The good practice good every day.
Bathe in that and you will protect all beings.

If you speak no lie, do no harm,
Steal not, if you believe and are generous,
What can be the good of going to Gaya?
The water at Gaya is the same as the water at home.”

M.I,39

No comments:

Post a Comment