நாமுமியோ ஷோரென் கே சியோ' என்னும் ஜப்பானிய வாசகத்துக்குப் பொருள்- "அனைத்து உயிர்களிடமும் உள்ள இறைத்தன்மையை வணங்கு கிறோம்' என்பதாகும்.
பிற உயிர்களைக் கொல்லக்கூடாது என்னும் உயரிய கோட்பாட்டின்மீது எழுந்த மதமே புத்த மதம். கொல்லாமைக் கொள்கையை மிக வலிமையாகப் பரப்பி வந்தது புத்த மதம்.
ரத்தம் என்பது உயிர்களின் உடலுக்குள்தான் ஓட வேண்டும். அது தரையில் ஓடக்கூடாது. வன்முறை, பகையுணர்வு போன்ற எண்ணங்களை மனதிலிருந்து வேரறுத்துவிட்டு அமைதியுடன் வாழவும், உலக நன்மைக்காக வழிபாடு செய்வதற்காகவும் ஒரு புத்தர் ஆலயம் தமிழகத் தில் அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலிலிருந்து புளியங்குடி செல்லும் சாலையில் ஐந்து கிலோமீட்டர் சென்றால், அங்கிருந்து ஒரு பாதை பிரிகிறது. கோவிலுக்குச் செல்லும் வழிகாட்டியாக ஜப்பானிய எழுத்துகள் பளிச்சிடுகின்றன. அந்த வழியில் சுமார் ஒரு கிலோமீட்டர் சென்றால் விரிருப்பு என்னும் கிராமத்தை அடையலாம். அங்கேதான் இயற்கை வனப்பு சூழ்ந்த மலையடிவாரத்தில் மிகுந்த அமைதியோடு காணப்படுகிறது புத்தர் கோவில்.
இங்கே வழிபாடு செய்வதற்காக ஜப்பான் நாட்டின் கொக்கைடோ பகுதியிலிருந்து வந்திருக்கும் ஆண் துறவியான இஷிதானீ, பெண் துறவியான கிமுரா ஆகியோருடன், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் துறவி லீலாவதியும் இருக்கிறார்.
ஆசைகள் அனைத்தையும் துறந்துவிட்டு, வெண்மையுடன் கூடிய காவி ஆடை அணிந்து, தலையை மழுங்க மொட்டையடித்துக் கொண்டு புத்த மதத்தில் தன்னை இணைத்துக் கொண்ட வர் லீலாவதி. ஒரத்தநாடு அருகேயுள்ள கன்னத்தங்குடி கிராமத்தில் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர் லீலாவதி. மதுரை காந்தி மியூசியத்தில் சமய தத்துவம் சம்பந்தமாகப் படித்துக் கொண்டிருந்தபோது லீலாவதியை புத்தரின் கொள்கைகள் ஈர்க்க, புத்த துறவியாகி விட்டார்.
சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் நிகழ்ந்த நிகழ்வை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் லீலாவதி.
""1930-ல் ஜாலியன் வாலாபாக் என்னுமிடத்தில் ஜெனரல் டயர் என்னும் ஆங்கிலத் தளபதி நடத்திய மனிதப் படுகொலை நிகழ்ச்சியானது, அப்போது ஜப்பானிலிருந்த புத்தமத குரு நிச்சி தட்சு பியூஜியை மிகவும் பாதித்தது. அகிம்சை வழியில் இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைப்பதற்கான பிரார்த்தனையில் ஈடுபட 1931-ல் இந்தியா வந்தார் குரு பியூஜி. காந்தியடிகளுடன் இணைந்து சர்வமத பிரார்த் தனையில் ஈடுபட்டார். அகிம்சை வழியில் உண்ணாவிரதத்தையும் நடத்தினார்.
காந்தியடிகளும் பியூஜி துறவியும் ஒரே கொள்கையைக் கொண்டவர்களாக இருந்ததால், பியூஜியின்மீது காந்தியடி களுக்கு ஈர்ப்பு உண்டானது. அதன் காரணமாக காந்தியடி கள் பியூஜிக்கு குருஜி என்னும் பட்டத்தைச் சூட்டினார்.
அதன்பின் உலக அமைதியை வேண்டி காந்தியடிகள், நேரு ஆகியோருடன் நடைப்பயணம் மேற்கொண்டார் குருஜி. அவ்வாறு உலக அளவில் குருஜியாக ஏற்றுக் கொள்ளப்பட்டவரின் வழிவந்தவர்கள்தான் நாங்கள்.
எங்கெல்லாம் அமைதி குலைந்து மக்கள் இன்னல் களுக்கு உள்ளாகின்றனரோ- அங்கே நடைப்பயணம் மேற்கொண்டு பிரார்த்தனை செய்வதோடு அகிம்சை யையும் போதிக்கிறோம்.
1984-ல் இலங்கையில் போர் நடந்து கொண்டிருந் தது. குருஜியின் ஆணையை ஏற்று புத்தபிட்சு இஷிதானீ தலைமையில் ஒரு புத்த பிட்சுகள் குழு இலங்கை சென்றது. அங்கே அவர்கள் அமைதிக்காக பிரார்த்தனை யில் ஈடுபட்டிருந்த சமயம், துப்பாக்கி குண்டு பாய்ந்து மண்டை பிளந்து பலியானார் ஒரு புத்த பிட்சு. ஆனாலும் தொடர்ந்து அமைதிப் பிரார்த்தனை நடைபெற்றது.
பிறரின் துன்பங்களை ஏற்றுக் கொண்டு, மக்களின் நன்மைக்காக நம்மை அர்ப்பணிக்க வேண்டும். அவர் களுக்காகப் பிரார்த் தனை செய்ய வேண் டும். அதன் வெளிப் பாடுதான் இந்த புத்தர் கோவில்'' என்றார்.
இந்தத் தென் பகுதியில் கோவில் அமைக்கக் காரணம் என்னவென்று கேட்டோம்.
""அகிம்சையைப் போதிக்க இலங்கைக்கு புத்தபிரான் சென்றபோது, இந்த மலையடி வாரத்தில் தங்கிச் சென்றாராம். அதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. புத்தரின் உயிராற்றல் இங்கே நிறைந்திருக்கிறது. அதனால்தான் உலக அமைதிக்காகப் பிரார்த்த னையில் ஈடுபடவும், அனைத்து உயிர்களிடமும் உள்ள உயிர்த்தன்மையை வணங்குவதற்காகவும் இங்கே இந்தக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது'' என்றார் லீலாவதி மிகச் சாந்தமான குரலில்.
புத்த துறவி இஷிதானீக்கு அறுபது வயதிருக் கும். பெண் துறவி கிமுராவுக்கு சுமார் முப்பது வயதே இருக்கும். ""மக்கள் சேவைக்காக எங்களை அர்ப்பணம் செய்திருக்கிறோம்'' என்கிறார்கள் இவர்கள்.
யாரிடமும் எதுவும் கேட்கக்கூடாது, கொடுப் பதை மறுக்கவும் கூடாது என்னும் கொள்கையை உறுதியோடு கடைப்பிடித்து வருகிறார்கள்.
இங்கே 120 அடி விட்டமும் 120 அடி உயரமும் கொண்ட புத்த ஸ்தூபி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 23 அடி நீளமுள்ள பெரிய பாறை ஒன்றின்மீது, மற்றொரு 23 அடி உயரமுள்ள பாறையைச் செங்குத்தாக நிறுத்தியிருக்கிறார்கள். எவ்வித பிடிமானமுமின்றி அந்தப் பாறை நிற்பதைப் பார்த்தால் அதிசயிக்கத் தோன்றுகிறது. அந்தப் பாறை யின்மீது உலக அமைதிக்கான பிரார்த்தனை வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன.
சமய வேறுபாடின்றி பலரது கவனத்தையும் தன்பால் ஈர்த்துள்ளது இந்த புத்தர் கோவில்!
படங்கள்: ராம்குமார்

No comments:
Post a Comment