Tuesday, February 5, 2013




  மகா முனி புத்தர்





மாரனை வெல்லும் வீர நின்னடி!

தீ நெறிக் கடும்பகை கடந்தோய் நின்னடி!
துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்னடி!
எண்பிறக் கொழிய இறந்தோய் நின்னடி!
கண்பிறர்க் களிக்கும் கண்ணோய் நின்னடி!
தீமொழிக் கடைத்த செவியோய் நின்னடி!
வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி!
நரகர்துயர் கெட நடப்போய் நின்னடி!
உரகர் துயரம் ஒழிப்போய் நின்னடி!
வணங்குதல் அல்லது வாழ்த்தல் என்நாவிற் கடங்காது!! 

(மணிமேகலை)

No comments:

Post a Comment