Tuesday, February 5, 2013

மெய்யறிவும் இரக்கவுணர்வும்

பௌத்தம்: சிறந்த வினா - சிறந்த விடை
7. மெய்யறிவும் இரக்கவுணர்வும்
Wisdom and Compassion


வினா: பௌத்தர்கள் அடிக்கடி மெய்யறிவு, இரக்கவுணர்வு என்று பேசுவதைக் கேள்விப்படுகிறேன். இவ்விரு சொற்களின் பொருளென்ன?

விடை: சில சமயங்கள் இரக்கம் அல்லது அன்பு ஆகியவை (கிட்டத்தட்ட இரண்டும் ஒரே பொருள் கொண்டுள்ளன) மிக முக்கியமான ஆன்மீகப் பண்புகள் என நம்புகின்றன. ஆனால் அவை மெய்யறிவை வளர்ப்பதற்கு எவ்வித முக்கியத்துவமும் தருவதில்லை. அதன் முடிவு, நீங்கள் நல்ல மனமுடைய முட்டாளாகவும், எதையும் புரிந்து கொள்ள முடியாத இரக்க குணமுள்ள மனிதராகவும் ஆகிவிடக்கூடும். அறிவியல் போன்ற மாற்றுச் சிந்தனைகள், இரக்க குணம் உட்பட்ட எல்லா உணர்ச்சிகளையும் நமது வழியிலிருந்து அகற்றி விட்டால் தான், நாம் மெய்யறிவை மிகச் சிறப்பாக வளர்த்துக் கொள்ள முடியும் எனக் கூறுகின்றன. இதன் விளைவு, அறிவியல் புதிய புதிய விஞ்ஞானத் தத்துவங்களுக்கு விடை காண்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. மனிதனுக்குச் சேவை செய்வதே விஞ்ஞானத்தின் நோக்கம் என்பதை மறந்து அவனைக் கட்டுப்படுத்தி அவன்மீது ஆதிக்கம் செலுத்த முற்படுகிறது. அறிவியல் அறிஞர்கள் அவர்களது திறமைகளை அணு ஆயுதங்களைத் தயாரிப்பதிலும், போருக்கு உதவுவதிலும் முன்னிறுத்தி அழிவுத் துறையில் ஈடுபடுவதிலிருந்தே இதை நாம் புரிந்து கொள்ளலாம்.

பௌத்தம், ஒவ்வொருவரும் நிறைவான மனிதர்களாக வாழவேண்டுமேயானால் மெய்யறிவையும் (Wisdom) இரக்கவுணர்வையும் (Compassion) ஒருசேர வளர்த்துக் கொள்ள வேண்டுமெனப் போதிக்கிறது.

QUESTION: I often hear Buddhists talk about wisdom and compassion. What do these two terms mean?
ANSWER: Some religions believe that compassion or love (the two are very similar) is the most important spiritual quality but they fail to give any attention to wisdom. The result is that you can end up being a good-hearted fool, a very kind person but with little or no understanding. Other systems of thought, like science, believe that wisdom can best be developed when all emotions, including compassion, are kept out of the way. The outcome of this is that science has tended to become preoccupied with results and has forgotten that science is to serve humans, not to control and dominate them. How, otherwise, could scientists have lent their skills to develop the nuclear bomb, germ warfare and the like? Buddhism teaches that to be a truly balanced and complete individual, you must develop both wisdom and compassion.
* * * * * * * *

வினா: பௌத்த சமயக் கூற்றுப்படி மெய்யறிவு (Wisdom) என்றால் என்ன?

விடை: உயர்ந்த மெய்யறிவு என்பது, உணரக்கூடிய பொருள் அனைத்தும் முழுமையற்றவை; நிரந்தர மற்றவை, தாம் என்ற உணர்வுமற்றவை என்பதை அறிந்து கொள்வதே. இப்படிப்பட்ட அறியுந்தன்மை முழுமையாக நம்மை விடுவித்து நிர்வாணம் என்றழைக்கப்படும் சிறந்த பாதுகாப்பையும் மகிழ்ச்சியையுமளிக்கும் இடத்துக்கு இட்டுச் செல்கிறது. இத்தகைய உயர்ந்த மெய்யறிவைப் பற்றிப் புத்த பெருமான் அதிகம் பேசியதில்லை.

மற்றவர்கள் என்ன கூறுகிறார்களோ அதை அப்படியே நம்புவது மெய்யறிவாகாது. நாமே நேராகப் பார்த்து ஆய்ந்து உணர்ந்து கொள்வதே உண்மையான மெய்யறிவு ஆகும். மாற்றுக் கருத்துக்களுக்கு இடந்தராது மனத்தை மூடி வைக்காமல் எதையும் திறந்த மனத்தோடு ஆராய்வது; மற்ற கருத்துக்களை உடனே மூடத்தனமாக நிராகரிக்காமல், அக்கருத்துக்களையும் கேட்டு முடிவெடுப்பது; பிற கருத்துக்கள் எதையும் கேட்க மறுத்து நமது தலைகளை மணலில் புதைத்துக் கொள்வதை விட, நமது நம்பிக்கைகளுக்கு மாறுபட்ட கருத்துகளையும் கேட்டுக் கவனமாக ஆராய்வது; பாரபட்சமாக வெறுப்புக் காட்டாது, நியாயமாக நடப்பது; மற்றவர்கள் நமக்குக் கூறும் உணர்ச்சிகரமான கருத்துகளை உடனே ஏற்றுக் கொள்ளாமல் கால அவகாசம் எடுத்து நன்கு சிந்தித்து தெளிந்த முடிவெடுப்பது; நமது நம்பிக்கைகளுக்கு எதிரானதாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளத் தக்க புதிய கருத்துக்கள் கூறப்படுமேயானால் நமது நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ளத் தயாராக இருப்பது; இத்தகைய செயல்களே மெய்யறிவு எனப்படும்.
எவனொருவன் இதைச் செய்கிறானோ அவன் உண்மையிலேயே அறிஞனாவான்; இறுதியில் உண்மையையும் அறிந்துகொள்வான். ஒருவர் காட்டுகிற வழியை நாம் பின்பற்றுவதென்பது மிக எளிதான வழியாகும். ஆனால், பௌத்த வழியைப் பின்பற்ற வேண்டுமென்றாலோ துணிவு, பொறுமை, இணங்குகிற தன்மை, மதி நுட்பம் ஆகியன தேவைப்படுகின்றன.

QUESTION: So what, according to Buddhism, is wisdom?
ANSWER: The highest wisdom is seeing that in reality all phenomena are incomplete, impermanent, and not self. This understanding is totally freeing and leads to the great security and happiness which is called Nirvana. However, the Buddha did not speak too much about this level of wisdom. It is not wisdom if we simply believe what we are told. True wisdom is to directly see and understand for ourselves. At this level then, wisdom is to keep an open mind rather than being closed-minded; listening to other points of view rather than being bigoted; to carefully examine facts that contradict our beliefs, rather than burying our heads in the sand; to be objective rather than prejudiced; and to take time about forming opinions and beliefs rather than just accepting the first or most emotional thing that is offered to us. To always be ready to change our beliefs when facts that contradict them are presented to us, that is wisdom. A person who does this is certainly wise and is certain eventually to arrive at true understanding. The path of just believing what you are told is easy. The Buddhist path requires courage, patience, flexibility and intelligence.
* * * * * * * *

வினா: நான் நினைக்கிறேன் ஒரு சிலரே இதனைச் செய்யவியலும்! ஒரு சிலரே இதனைக் கடைப்பிடிக்க முடியுமென்றால், பௌத்தத்தில் என்ன பொருளிருக்கிறது?

விடை: உண்மைதான். பௌத்தத்தை ஏற்றுக்கொள்ள இன்று அனைவரும் தயாராக இல்லை. சிலருக்கு இப்போது புத்தரின் போதனைகளை விளங்கிக் கொள்ள முடியவில்லயென்றாலும் அவர்கள் அடுத்த பிறவியிலாவது பௌத்தத்தைப் புரிந்து கொள்ளும் தகுதி பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படலாம். எனினும் பலர் சரியான நற்சொற்களாலும், ஊக்கத்தாலும் விளங்கிக் கொள்ளும் சக்தியைப் பெருக்கிக் கொள்கின்றனர். இதன் காரணமாகவே கண்ணியத்துடனும் அமைதியுடனும் பௌத்தர்கள் பௌத்தத்தின் உட்கருத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். புத்த பெருமான் நமக்கு இவற்றைப் பேரன்புடனும் இரக்கவுணர்வுடனும் போதித்தார். நாமும் மற்றவர்களுக்குப் பேரன்புடனும் இரக்கவுணர்வுடனும் போதிப்போம்.

QUESTION: I think few people could do this. So what is the point of Buddhism if only a few can practice it?
ANSWER:  It is true that not everyone is ready for the truths of Buddhism yet. But if someone were not able to understand the teachings of the Buddha at present then they may be mature enough in the next life. However, there are many who, with just the right words or encouragement, are able to increase their understanding. And it is for this reason that Buddhists gently and quietly strive to share the insights of Buddhism with others. The Buddha taught us out of compassion and we should teach others out of compassion too.
* * * * * * * *

வினா: நம்பிக்கைக்கு பௌத்தத்தில் இடம் உள்ளதா?

விடை: சில சமயங்கள் நம்பிக்கையே மனிதனை மோட்சத்திற்கு எடுத்துச் செல்லும் என்று போதிக்கின்றன. அதாவது அந்த சமயத்தின் போதனைகளை உண்மையென்று ஏற்றுக்கொண்டால், அந்த சமயக் கடவுளை அது திருப்திபடுத்துகிறது. அந்தக் கடவுளுக்கும் மனிதனுக்கும் ஒரு உறவை ஏற்படுவதால் அந்தக் கடவுள் அவனை மோட்சம் அடையச் செய்வார். பௌத்தத்தில் நம்பிக்கை (பாலிமொழியில் சத்தா) வேறு மாதிரி புரிந்து கொள்ளப்படுகிறது.

எனக்கு காய்ச்சல் இருப்பதாக எடுத்துக்கொள்ளுங்கள். நண்பன் ஒருவனிடம் இதைச் சொல்ல அவன் தன்னுடைய மருத்துவரைப் பார்க்கச் சிபாரிசு செய்கிறான். அந்த மருத்துவர் சரியாகக் கவனிப்பாரா மாட்டாரா என்று எனக்கு தெரியாது. ஆனால் எனது நண்பனின் கருத்தில் எனக்கு நம்பிக்கை (அவன் பொறுப்பானவன், நம்பக்கூடியவன்) இருக்கிறது. மருத்துவரைச் சந்திக்கக் குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்கிறேன். காத்திருக்கும் அறையில் சுவற்றில் மாட்டியிருக்கும் அவர் படித்த பட்டச் சான்றிதழ்களைப் படிக்கிறேன். மருத்துவர் உள்ளூர் கல்லூரியில் படித்துவிட்டு மேற்படிப்பிற்கு லண்டன் சென்றதாகத் தெரிகிறது. அந்தச் சான்றிதழ்கள் உண்மை யானவையா போலியானவையா என்பது தெரியாது. ஆனால் நம்பிக்கையோடு அவை உண்மையானவை என்று ஏற்றுக்கொள்கிறேன். சுகாதாரத்துறை அமைச்சகமும், மருத்துவர் சங்கமும் தகுதி இல்லாத மருத்துவரைத் தொழில் செய்ய அனுமதிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. மருத்துவரைச் சந்திக்கும் நேரம் வந்தது. அவர் (பெண் மருத்துவர்) தொழில் அறிவு மிக்கவராகவும், இனிமையாகப் பழகுபவராகவும், நோயாளியிடம் அக்கறை காட்டுபவராகவும் இருந்தார். மேலும் அவர் கொடுத்த மருந்து என்னை விரைவில் குணப்படுத்தியது. இதற்கு முன் இந்த மருத்துவர் நன்றாகக் கவனிக்கக் கூடியவரா இல்லையா என்பது தெரியாது. ஆனால் இப்போது அவரிடம் சென்று வந்த அனுபவத்தின் பிறகு அவர்மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதனால் அடுத்து ஓரிரு முறை நான் உடல் நலம் குன்றிய போது மீண்டும் அதே மருத்துவரிடமே சென்றேன். முன்பு போலவே சிறப்பாகக் கவனித்தார்.
இப்போது அவர் நல்ல மருத்துவர் என்ற வெறும் நம்பிக்கை மட்டும் அல்ல, நல்ல மருத்துவர் தான் என்பது உறுதியாகத் தெரிந்து விட்டது. ஆனால் இந்த அறிவைப் பெறுவதற்கு முதலில் நம்பிக்கை தேவைப் பட்டது. என் நண்பன் மீது நம்பிக்கை; மருத்துவர் படித்த சான்றிதழ்கள் மீது நம்பிக்கை; மருத்துவ அதிகாரிகளின் சட்டதிட்டங்களின் மீது நம்பிக்கை.

பௌத்தத்திற்கு நம்பிக்கையின் மீதான நோக்கமும் இவ்வாறு தான். ஒன்றை முயற்சி செய்யத் திறந்த மனமும் விருப்பமும் வேண்டும். பௌத்தப் போதனைகள் மீது நீங்கள் வைக்கும் சிறிய நம்பிக்கை அவற்றைப் பயிற்சி செய்ய ஊக்குவித்து, விளைவுகளைக் காணும் வரை விடாப்பிடியாக தொடர்ந்து செய்யத் தூண்டும். காலப் போக்கில் உங்களுக்கு நம்பிக்கை தேவையிராது. அதற்கு மாறாகத் தெளிந்த அறிவு வந்துவிடும்.

QUESTION: Is there any role for faith in Buddhism?
ANSWER: According to some religions a person is saved by faith. That is, they accept the truth of certain theological ideas, this pleases the supreme being, it creates a relationship with this being and he responds by saving the person. In Buddhism faith (saddha) is understood differently.
Let’s say I’m ill, I mention this to a friend and he recommends me to his doctor. I don’t know whether this doctor is any good but I trust (or if you like, have faith and confidence) in my friend’s judgment. I make an appointment, go to the doctor’s clinic and while in the waiting room examine the certificates on the wall. I see that this doctor did his medical degree in the local university and then went on to higher studies in London. It is possible that these certificates are fake but I take it on trust that they are genuine. I have confidence that the Ministry of Health and the Medical Association make sure that only properly qualified doctors practice. Finally I get to see the doctor. I find her knowledgeable, pleasant and caring and the medicine she prescribes soon gets me back to normal. Previously I had no idea whether this doctor was any good, now my experience gives me confidence in her. Consequently, I consult her the next two times I’m ill and I find her to be just as good. Now I no longer have faith that she is a good doctor, I know she is. But I would never have arrived at this knowledge had I not first had at least some faith; faith in my friends advice, in the genuiness of the certificates and in the regulations of the medical authorities.
This is how Buddhism sees faith, as an openness to a possibility, as a willingness to give something a try. Some faith in the Buddha’s teachings will encourage you to practice them and persist until results come. In time you won’t need faith, it will be replaced by knowledge.
 
* * * * * * * *

வினா: பௌத்த நெறிப்படி இரக்க உணர்வென்றால் (Compassion) என்ன?

விடை: மெய்யுணர்வு (WISDOM) என்பது இயல்பான நமது அறிவார்ந்த தன்மையை நிரப்புவதைப்போல, இரக்கவுணர்வு (COMPASSION) என்பது இயல்பான நமது மனவெழுச்சியுள்ள உணர்வுகளை நிரப்புகிறது. மெய்யுணர்வைப் போலவே இரக்கவுணர்வும் மனிதனின் தனித் தன்மை வாய்ந்த குணமாகும். COMPASSION என்னும் ஆங்கிலச் சொல் இரண்டு வார்த்தைகளைக் கொண்டதாகும். 'COM' என்றால் ‘சேர்ந்து’ என்றும் 'PASSION' என்றால் 'துயர்ப்படல்' என்றும் பொருள்படும். ‘சேர்ந்து துயர்ப்படல்’ என்பதே இரக்கவுணர்வு. நாம் ஒருவர் துன்புறுவதைக் கண்டு அவர்களது வேதனையை நம்முடைய வேதனையாக ஏற்று, அவர்களது வேதனையை நீக்கவோ, குறைக்கவோ முயன்றோமானால், அதுவே 'COMPASSION' என்னும் இரக்கவுணர்வாகும்.
மனித இனத்தின் சிறந்த குணங்கள், புத்தர்களின் குணங்களான பகிர்ந்துகொள்ளல், மற்றவருக்கு வசதி செய்தல், இரக்கப்படுதல், பிறர் மீது அக்கறை  கொண்டிருப்பது, மற்றவரைக் கவனித்தல் இவையே இரக்க உணர்வின் பட்டியலாகும். இரக்க குணமுடைய மனிதரொருவரிடம், மற்றவரைக் கவனித்தல், மற்றவரிடம் அன்பு செலுத்துதல் முதலியன நம்மையே கவனித்தல், நம்மிடம் அன்பாக இருத்தலின் மூலமாகவே உதிக்கும். நாம் நம்மைப் புரிந்து கொண்டோமேயானால், அது மற்றவர்களையும் புரிந்து கொண்டதற்கு இணையாகும். நாம் மற்றவரை உணர்ந்தோமேயானால், நம்மையே உணர்ந்ததற்கு இணையாகும். ஆக பௌத்தத்தில் ஒரு தனி மனிதனின் சமய உணர்வுகள் மலர்ந்தால், அது இயற்கையாகவே மற்றவரின் நலத்தைப் பற்றி அக்கறை கொள்ளச்செய்யும். இதைப் புத்தபெருமானின் வாழ்க்கை நன்கு படம் பிடித்துக் காட்டுகிறது. புத்தபெருமான் ஆறாண்டுகள் தன் சுயநலத்துக்காக அரும்பாடு பட்டார். அதற்குப் பிறகு இந்த மனித சமுதாயமே பயனடைய அவர் காரணமானார்.

QUESTION: What, according to Buddhism, is compassion?
ANSWER: Just as wisdom covers the intellectual or comprehending side of our nature, compassion covers the emotional or feeling side. Like wisdom, compassion is a uniquely human quality. Compassion is made up of two Latin words, com meaning ‘together’ and passio meaning ‘suffering.’ And this is what compassion is. When we see someone in distress and we feel their pain as if it were our own, and strive to eliminate or lessen their pain, then that is compassion. All the best in human beings, all the Buddha-like qualities like sharing, readiness to give comfort, sympathy, concern and caring - all these things are manifestations of compassion. You will notice also that in the compassionate person, care and love towards others has its origins in care and love for them self. We can best understand others when we really understand ourselves. We will know what's best for others when we know what's best for ourselves. We can feel for others when we feel for ourselves. So in Buddhism, one's spiritual development blossoms quite naturally into concern for the welfare of others. The Buddha's life illustrates this principle very well. He spent six years struggling for his own welfare after which he was able to be of benefit to the whole of humankind.
* * * * * * * *

வினா: நமக்கு நாமே உதவிக் கொண்ட பிறகே மற்றவர்களுக்கு உதவச் சொல்கிறீர்கள். இது ஒரு வகைச் சுயநலமாகாதா?
விடை: பொதுவாக நாம் பொதுநல சேவையை (தன் நலம் பேணும் முன் பிறர் நலம் பேணும் தன்மையை) சுயநலத்திற்கு (பிறர் நலம் பேணும் முன் தன் நலம் பேணுவதற்கு) எதிரானதாகக் கருதுகிறோம்.

ஆனால் பௌத்தம் இதனை இதுவா அதுவா என்று ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்காமல் இரண்டும் கலந்த கலவையின் சாரத்தையே விரும்புகிறது. உண்மையான சுயநலக் கவலை படிப்படியாக முதிர்ந்து மற்றவர்களும் நம்மைப் போன்றவர்களே என்ற உணர்வு எழக் காரணமாகிறது. இதுவே உண்மையான இரக்க உணர்வாகும். புத்தபெருமானின் போதனை என்னும் மகுடத்தில் இரக்க உணர்வு என்பது ஒரு மின்னும் வைரமாகும்.

QUESTION: So you are saying that we are best able to help others after we have helped ourselves. Isn't that a bit selfish?
ANSWER: We usually see altruism, concern for others before oneself, as being the opposite of selfishness, concern for oneself before others. Buddhism does not see it as either one or the other but rather as a blending of the two. Genuine self-concern will gradually mature into concern for others as one sees that others are really the same as oneself. This is genuine compassion. Compassion is the most beautiful jewel in the crown of the Buddha's teachings.
* * * * * * * *

வினா: நீங்கள் இரக்க உணர்வும் அன்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி என்று கூறினீர்கள். அவை எப்படி மாறுபடுகின்றன?
விடை: இரண்டும் தொடர்புடையவை என்று சொல்வதே சரியாக இருக்கும். ஆங்கிலத்தில் 'Love' என்ற வார்த்தையால் பல விதமான உணர்ச்சிகளை விவரிக்கலாம். தம்பதியரிடையே உள்ள காதல், பெற்றோரிடம் காட்டும் அன்பு, நம் குழந்தைகளிடம் காட்டும் பாசம், நெருங்கிய நண்பரிடம் காட்டும் நேசம், அண்டை வீட்டாருடன் காட்டும் பிரியம். இந்த உணர்ச்சிகள் எல்லாமே ஒன்றுக்கொன்று சற்று மாறுபட்டவை என்பது தெளிவாகத் தெரியும். அதே சமயம் இந்த உணர்ச்சிகளுக்குப் பொதுவான பல குணங்களும் இருப்பதால் 'Love' என்ற ஒரே வார்த்தையை அனைத்திற்கும் பயன்படுத்துகிறோம். அந்தப் பொதுவான குணங்கள் எவை? ஒருவர் மீது அன்பு கொண்டால் அவர்களுடன் நெருங்கிப் பழகப் பார்க்கிறோம். அவர்கள் மீது நாம் உரிமை கொண்டாடுகிறோம். அவர்கள் நலனில் நமக்கு அக்கறை ஏற்படுகிறது. அவர்களுடை பழக்கங்களும் குணாதிசயங்களும் மற்றவர்களுக்கு எரிச்சல் ஊட்டினாலும் நம்மைப் பாதிப்பதில்லை. நாம் அவர்களுக்கு ஆதரவு காட்ட முயற்சியேதும் செய்யத் தேவையேயில்லை. இயல்பாகவே அது நிகழ்கிறது. மற்றவர்களிடம் இணைந்திருத்தல், தயை, அக்கறை பரிவு போன்ற அனைத்து உணர்வுகளையும் காட்டப் பயன்படும் ஒரே சொல் அன்பு என்பதாகும். இத்தகைய உணர்ச்சிகள் நெருங்கிய உறவினர்களிடம் இயல்பாகவே ஏற்படும். புத்தர் எல்லோரிடமும் இத்தகைய உணர்ச்சிகள் எழ முயற்சிக்க வேண்டும் எனக் கூறுகிறார்.

புத்தர் கூறுகிறார்:
'ஒரு தாய் தான் பெற்ற ஒரே குழந்தையை எப்படித் தன் உயிரைத் திரணமாக மதித்துப் பாதுகாப்பாளோ, அதைப் போலவே இந்த உலகில் உள்ள எல்லா உயிரினங்களிடத்தும் எல்லையற்ற அன்பைக் காட்டப் பழகிக் கொள்ள வேண்டும்.'
பௌத்தத்தில் இந்த 'எல்லையற்ற அன்பு  'மெத்தா’ என்ற பாலி மொழிச் சொல்லால் அழைக்கப்படும். இடயூறுகளையும் துன்பத்தையும் அனுபவிக்கும் ஒருவரை நாம் சந்திக்கும் போது, அன்பின் ஒரு குணாதிசயமான 'பிறர் நலனில் அக்கறை' என்பது உறுதி பெற்று இரக்க உணர்ச்சியாக வெளிப்படுகிறது. ஆக இரக்க உணர்ச்சி என்பது ஒரு அன்பு பூண்ட மனம், துக்கம் அனுபவிப்பவரோடு கொண்ட அன்னியோன்னியத்தைக் காட்டுகிறது.

QUESTION: You said before that compassion and love are similar. How do they differ?
ANSWER: Perhaps it might be better to say that they are related. In English the word 'love' can be used to describe a wide variety of feelings. We can love our spouse, our parents, our children, our best friend and our neighbor. Clearly, all these types of feelings have certain differences but they have enough elements in common that allows us to use one word, 'love,' for all of them. What are these common elements? When we love someone we seek closeness with them, we find them interesting, we are concerned for their welfare, habits or traits they might have that others find irritating don't bother us, we do not have to make a conscious effort to be considerate towards them, it comes naturally to us. Love is a word for connectedness, kindness, concern and consideration towards another. Usually we feel like this towards those directly related to us. The Buddha said we should try to feel like this towards everyone. He said:
'Just as a mother would protect her one and only child even at the risk of her own life, even so, one should cultivate immeasurable love towards all beings in the world.' Sn.149
In Buddhism this 'immeasurable love' is called metta.
When we encounter someone suffering or distressed, the concern element of love becomes dominant and manifests itself as compassion. Thus compassion is the loving mind's way of relating to those who are suffering.
* * * * * * * *

வினா: ஒருவர் அன்போடும் சாந்தமாகவும் இருந்தால் மக்கள் அவர் தலையில் உட்கார்ந்து விடுவார்கள் என்று நான் நினைக்கிறேன்.

விடை: அப்படியும் நடக்கலாம். மாறாக நீங்கள் சுயநலவாதியாகவும் முரட்டுத்தனமானவராகவும் இருந்தாலும் அப்படிச் செய்பவர்கள் இருப்பார்கள். ஏனெனில் உங்களைவிட முரடர்களும், அச்சுறுத்துகிறவர்களும் இந்த உலகில் இருக்கத்தான் செய்வார்கள். இருக்க மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் ஏதும் இல்லை. சிலர் உங்கள் நல்ல குணத்தை அவர்கள் நலனுக்காகப் பயன்படுத்திக் கொண்டாலும், அதே சமயம் பலர் உங்கள் உயர்குணத்தை உணர்ந்து உங்களுக்குரிய மரியாதை அளிப்பார்கள். எப்போதுமே உங்களைப் பிடிக்காதவர்களைவிட உங்களுக்கு நண்பர்களும், உதவி செய்பவர்களும் அதிகம் இருப்பார்கள். மேலும் உங்களுக்குப் பிடிக்காதவர்களைப் போலவே நீங்களும் ஏன் மாற வேண்டும்?

ஒரு பழைய பௌத்த புத்தகம் இவ்வாறு அறிவுரை கூறுகிறது:
'ஒரு கீரி, பாம்பை அணுகுமுன் தன் உடல் பாதுகாப்புக்கு ஒரு மருந்தை அருந்தி விட்டுத் தான் செல்கிறது. அதைப் போல ஒரு அறிவாளி, தியானம் செய்பவன், உலகை அணுகுமுன் அதில் உள்ள கோபம், பொறாமை, சண்டை சச்சரவுகள், வெறுப்பு போன்றவைகளால் அவன் பாதிக்கப்படாமல் இருக்க, அன்பு என்ற மருந்தை மனதில் நிறைத்துத் தான் அணுக வேண்டும்.'

QUESTION: I think that when you are kind and gentle people will walk all over you.
ANSWER: That is quite possible. But this can happen even if you are selfish and aggressive, because there will always be people who are even nastier than you are. There are no guarantees. However, while it is true that some people may take advantage of your goodness, most people will appreciate you and treat you with respect. You will always have more friends and helpers than exploiters. Also, why should you allow yourself to become like the very people you do not like?
An ancient Buddhist text gives this advice;
'As a mongoose approaches a snake to seize it only after having supplied his own body with a medicine, so to, the meditator, the earnest student of meditation, on approaching the world abounding as it is with anger and malice, plagued with quarrels, strife and contention and hatred, must anoint his mind with the medicine of love.' Milindapanha 394

No comments:

Post a Comment