தம்ம வந்தனம் Dhamma Vandana
Svākkhāto bhagavatā dhammo,
Sandiṭṭhiko akāliko ehipassiko,
Opanayiko paccattaṃ veditabbo viññūhīti.
The Dhamma is well-expounded by the Blessed One,
to be seen here & now, timeless, inviting all to come & see,
leading inward, to be seen by the wise for themselves.
சுவாகாதோ பகவதா தம்மோ
சந்தித்திக்கோ அகாலிகோ எஹி பஸ்ஸிகோ,
ஓபனயிகோ பச்சத்தம் வேதிதப்போ விஞ்ஞுகிதி
ஆசீர்வதிக்கப்பட்ட அவர் தர்மத்தை நன்கு விவரமாக விளக்கிக் கூறியிருக்கிறார்.
இப்போதே இங்கேயே காணக்கூடிய தர்மம், கால வரையற்றது . அனைவரையும் வரவேற்று பார்த்துப் புரிந்து கொள்ள அழைக்கிறது
ஆன்மீகத்தை வளர்க்கிறது, அறிவுள்ளவர் தாங்களாகவே புரிந்து கொள்ளக் கூடியது.
*****
Svākkhāto bhagavatā dhammo,
Sandiṭṭhiko akāliko ehipassiko,
Opanayiko paccattaṃ veditabbo viññūhīti.
The Dhamma is well-expounded by the Blessed One,
to be seen here & now, timeless, inviting all to come & see,
leading inward, to be seen by the wise for themselves.
சுவாகாதோ பகவதா தம்மோ
சந்தித்திக்கோ அகாலிகோ எஹி பஸ்ஸிகோ,
ஓபனயிகோ பச்சத்தம் வேதிதப்போ விஞ்ஞுகிதி
ஆசீர்வதிக்கப்பட்ட அவர் தர்மத்தை நன்கு விவரமாக விளக்கிக் கூறியிருக்கிறார்.
இப்போதே இங்கேயே காணக்கூடிய தர்மம், கால வரையற்றது . அனைவரையும் வரவேற்று பார்த்துப் புரிந்து கொள்ள அழைக்கிறது
ஆன்மீகத்தை வளர்க்கிறது, அறிவுள்ளவர் தாங்களாகவே புரிந்து கொள்ளக் கூடியது.
*****
பாலி மொழிச் சொற் பொருள்
svākhāto சுவாகாதோ = Well put forth சிறப்பாகக் கூறப் பட்டிருக்கிறது
bhagava பகவா = Blessed One (who has good fortune, happiness, prosperity) ஆசீர்வதிக்கப்பட்டவர் (மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், செழிப்புள்ள) - புத்தரின் ஒரு விகடப் பெயர்
bhagavatā: By the Blessed One.
dhammo: dhamma தம்மா = Buddha's Teaching. The Law. Derived from the verb dha-, to hold. Thus dhamma "holds the world together". தர்மம். இங்கு தர்மம் என்பது புத்தரின் போதனைகளைக் குறிக்கிறது.
sandiṭṭhiko சந்தித்திக்கோ = visible in this world இவ்வுலகில் தெரிகிறது.
akāliko அகாலிகோ = immediate இப்போதே
ehipassiko ஏஹி பஸ்ஸிகோ = inviting to come and see. வந்து பாருங்கள் என்று வரவேற்கிறது
ehi ஏஹி = come! வாங்க!
passi பஸ்ஸி = see! பாருங்க!
opanayiko ஓபனயிகோ = leading (to the goal, that is Nirvana) நிர்வான மோட்சத்திற்கு அழைத்துச் செல்கிறது
paccattaṃ பச்சத்தம் = individually, தனிப்பட்ட முறையில்
veditabbo வேதிதப்போ = should be known. தெரிந்திருக்க வேண்டும்
viññūhi விஞ்ஞுஹி = wise, learned, intelligent. அறிஞர்களால், படித்தவர்களால், அறிவுள்ளவரால்
விளக்கவுரை Based on this English Commentary
இந்த வரிகளில் தர்மத்தின் (புத்தரின் போதனைகளை) பண்புகளை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டிருக்கிறது. தர்மம் நன்றாகப் போதிக்கப் பட்டிருக்கிறது ( சுவாகாதோ), ஏனென்றால் அதில் பிழைகள் ஏதும் இல்லை. மேலும் அதில் முழுமையாக, எதையும் விடாமல், போதிக்கப் பட்டிருக்கிறது.
தர்மம் இவ்வுலகிலேயே பார்க்கத் தக்கது (சந்தித்திக்கோ ). அதன் பயனை இவ்வுலகிலேயே பெறலாம். அடுத்த ஜன்மத்திற்கோ வேறு உலகிற்கோ காத்திருக்கத் தேவையில்லை. தியானம் செய்வதின் விளைவை இந்தப் பிறவியிலேயே பெறுகிறோம்.
தர்மம் உடனடியானது (அகாலிகோ). தர்மப்படி பயிற்சி செய்வதனால் அதன் விளைவுகள் உடனடியாக வரும். எதிர் காலத்தில் வரும் என்று காத்திருக்க வேண்டியதில்லை. தர்மத்தைத் தொடர ஆரம்பிக்கும் போது அதன் விளைவு உடனே வரும். படிப்படியாகத் தர்ம வழி நம் நோக்கத்திற்கு நம்மை எடுத்துச் செல்வதை உறுதிப் படுத்திக் கொள்ளலாம்.
வந்து பார்க்க அனைவரையும் தர்மம் வரவேற்கிறது (ஏஹி பஸ்ஸிகோ). அதாவது அனைவரையும் தர்மம் நோக்கத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதைத் தாங்களாகவே உறுதிப் படுத்திக் கொள்ள வரவேற்கிறது. யார் மீதும் அதைக் கட்டாயமாகத் திணிக்க முடியாது. மேலும் கண்மூடித் தனமான நம்பிகையினால் நோக்கத்தை அடையமுடியாது. ஒருவர் "வந்து பார்க்க" வேண்டும். முயற்சி எடுத்தாக வேண்டும்.
அது நோக்கத்திற்கு எடுத்துச் செல்லும் (ஓபனயிகோ ). போதனைகளைத் தொடர்வதால், இந்த ஒழுங்கைக் கடைப்பிடிப்பதால், தர்மத்தைப் பின்பற்ற முயற்சி எடுப்பதால் நாம் உறுதியாக நோக்கத்தை அடையலாம். மேலும் நிர்வான மோட்சத்தைக் காணலாம்.
அறிவுடையோர் தாங்களாகவே தெரிந்து கொள்ள வேண்டும் (பச்சத்தம் வேதிதப்போ விஞ்ஞுஹி). செயற்படாமல், சுறுசுறுப்பில்லாமல் பிரார்த்தனைகள் மட்டும் செய்து, புத்தகங்களை மட்டும் படித்து நிர்வான மோட்சத்தை அடைய முடியாது. அனைவரும் தாங்களாகவே முயற்சிக்க வேண்டும். நோக்கத்தை அடையத் தர்மத்தைப் பற்றிய ஆழமான நுண்ணறிவு வேண்டும். அந்த நுண்ணறிவு தானாக வராது. அதைப் பெறக் கடினமாக முயற்சிக்க வேண்டும். வெளிச் சக்தியினால் அந்த நுண்ணறிவைப் பெற முடியாது. வேறு யாரும் நமக்கு ஞானத்தைக் கொடுக்க முடியாது. நாமாக முயற்சி செய்து தான் ஞானத்தை அடைய வேண்டும். இதை உணரச் சற்று அறிவுடமை இருக்க வேண்டும் . அப்போதுதான் பாதையில் செல்ல முடியும். ஒரு முட்டாளால் இந்த உண்மைகளை உணர்ந்து அதன்படி நடக்க முடியாது.
No comments:
Post a Comment