Wednesday, February 13, 2013

தென்னிந்திய பவுத்த சங்கம்

தென்னிந்திய பவுத்த சங்கம்




தென்னிந்திய பவுத்த சங்கம் 1900 ஆம் ஆண்டு அயோத்திதாசப் பண்டிதரால் சென்னை பெரம்பூரில் தொடங்கப்பட்டது .
பெரம்பூரில் பவுத்த சங்கம் கட்டுவதற்கு பேராசிரியர் பி .லட்சுமி நரசுவும் , தோழர் எம். சிங்கரவேலுவும் சேர்ந்து ஸ்ரீ அனாகரிக தம்மபாலாவிடம் ருபாய் 3ooo பெற்று பணியினை தொடங்குகின்றனர்.
செலவுத்தொகை மேலும் அதிகமானதால் மீண்டும் அனாகரிக தம்மபாலாவிடம்
பண உதவி கோரப்பட்டது. அதற்கு அவர் கூடுதல் தொகை தர மறுத்துவிடுகிறார்.
அதனால் சங்க உறுப்பினர்கள் மூலமாகவும், பொதுமக்கள் மூலமாகவும் வசூலித்த பணத்தில் பவுத்த சங்கம் கட்டிமுடிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பவுத்தருக்கும் சொந்தமான பவுத்த சங்கம்
இது மட்டுமே. இந்த தென்னிந்திய பவுத்த சங்கத்தின் முகவரி :
#41, நெல்வயல் சாலை, பெரம்பூர், சென்னை - 600011

No comments:

Post a Comment