புத்தர் பெரிதாக என்னத்தை சொல்லிவிட்டார் ?
இந்தியாவில் தோன்றிய பௌத்த மதம் கௌதம புத்தரால் தோற்றுவிக்கப்பட்டது. இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் ஆரிய பிராமணர்களின் மடமையான கொள்கைகளையும், தவறான வாழ்வியல் முறைகளையும் கண்டித்துப் பௌத்தம் பிரச்சாரம் செய்தது. பௌத்தம் ஏற்கனவே இருந்த சமண மதக் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு புதிய வடிவில் தோற்றம் பெற்றது. ஆனால் காலப் போக்கில் பௌத்தம் பிரமாணர்களின் ஊடுருவல், அரசியல் காரணங்களால் இந்தியாவில் செல்வாக்கு இழந்து போனது சோகமான விடயமாகும். இன்று பௌத்தம் உலகெங்கும் பல இடங்களில் வெவ்வேறு தோற்றத்துடன் இயங்கி வருகின்றது. மேற்குலகில் கடந்த நூற்றாண்டில் புகுந்த பௌத்தம் மேற்குலகக் கொள்கையாக்கங்களை உள்வாங்கிப் புதியதொரு பயணத்தைத் தொடங்கி உள்ளது. மேற்குலகில் இருக்கும் பலர் பௌத்தத்தால் ஈர்க்கப்பட்டுள்ளனர். காரணம் பௌத்ததின் மூலக் கொள்கைகள் அறிவுக்குப் பொருத்தமானதாக இருப்பதே. ஏனைய சமயங்களைப் போல் இல்லாமல் பௌத்தம் இலகுத் தன்மை வாய்ந்தது. பழமைகளை நீக்கி புதுமைகளை உள்வாங்கிக் கொள்ளக் கூடியது. அத்தோடு பிரம்மம் குறித்தோ உலகை ஒரு கடவுள் படைத்தார் என்ற கொள்கைகளைப் பௌத்தம் ஏற்றுக் கொள்வதில்லை. சொல்லப் போனால் பௌத்ததில் கடவுளுக்கு இடமே இல்லை. இன்று உலகின் பல பாகங்களில் பல பௌத்த மதத்தினர் கடவுளர்களை வணங்கி வருகின்றார்கள். இருந்தாலும் அது பௌத்ததின் மூலக் கொள்கைகள் அல்ல.
இன்று பல மதங்கள் அறிவுக்குப் பொருந்தாதவைகளை போதித்து மக்களை மூடர்களாக்கிக் கொண்டிருக்கும் வேளையில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய புத்தரின் போதனைகளை படிக்கும் போது நமக்கு சிலிர்ப்பை உண்டாக்குகின்றது. புத்தரின் போதனைகள் சிலவற்றை இங்கு உங்களுடன் பகிர்ந்துக் கொள்கின்றேன். அவை நம்மை உத்வேகம் கொள்ளச் செய்வதாக இருக்கின்றது.
No comments:
Post a Comment